18

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று. என்னை? “வணக்க மதிகார மென்றிரண்டுஞ்
சொல்லச், சிறப்பென்னும் பாயிர மாம்” (யா. வி. க, உரை) என்றாராகலின். ‘பூமலி* * *
*றொழுது’ என வணக்கம் சொன்னவாறு. ‘நன்கியம்புவனெழுத்து’ என அதிகாரம்
சொன்னவாறு. அஃதேல், நூல் நுவல்வான் புகுந்து ஈண்டு வணக்கம் வைக்கவேண்டியது
என்னையோ வெனின், நன்று சொன்னாய்! “வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து, மங்கல
மொழி முத லாக வகுத்தே, யெடுத்துக் கொண்ட விலக்கண விலக்கியம், இடுக்க ணின்றி
யினிது முடியும்” (யா. வி. க, உரை) என்பவாகலின், ஈண்டு வணக்கம் செய்யப்பட்டது.

     (இ - ள்.) பூ மலி அசோகின், எ - து பூக்களால் மிக்குள்ள அசோகினது எ - று.
புனை நிழல் அமர்ந்த, எ - து அலங்கரியாநின்ற நிழலிலே எழுந்தருளியிருந்த எ - று.
நான்முகன்தொழுது, எ - து நான்கு திருமுகங்களையுடையானை வணங்கி எ - று.
நன்கு இயம்புவன், எ - து அழகிதாகச் சொல்லுவன் எ - று. எழுத்து, எ - து
எழுத்திலக்கணத்தை எ - று.

     ஏகாரம் ஈற்றசை, பதப்பொருளுரைத்தவாறு. என்னை? “என்ன சொல்லினு மியன்ற
மருங்கிற், பன்னி யுரைப்பது பதப்பொரு ளாகும்” என்றாராகலின்.

     (பொழிப்புரை.) “நால்வகைப்பூக்களினால் மிக்குடைய அசோகினது ‘தன்
எல்லையை இகவாதே எப்பொழுதும் அலங்கரியா நின்ற நிழலிலே எழுந்தருளியிருந்த
நான்முகத் தொருவனை மனமொழி மெய்களின் மகிழ்ந்துடன் வணங்கி
ஈரைங்குற்றமுமகற்றி ஈரைந்தழகொடும் புணர்ந்து அரிதின்றி விளங்க
எழுத்திலக்கணத்தை யான் சொல்லுவன் எ - று.

     இது பொழிப்புரை; என்னை? “பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப்,
பிண்ட மாகக் கொண்டுரைப் பதுவே” (யா. கா. வி. உரை) என்றாராகலின்.
     (பி - ம்) 1 என்னுதலிற்றோவெனின் 2 எல்லையை
 

எழுத்திலக்கணத்தின் பகுதி

     


(56)


எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலியென்றா
பதம்1புணர் பெனப்பன் னிருபாற் றதுவே.
 
     எ - ன், மேல் எழுத்திலக்கணமியம்புவனென்றார்; அஃது இத்துணைப் பகுதியான்
உணர்த்தப்படுமென்று அதுபடும் 2பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எழுத்துக்களது தொகையும் பெயரும் முறையும் பிறப்பும் வடிவும்
அளவும் மொழிக்கு முதலாவனவும் ஈறாவனவும் இடையாவனவும் போலியுமென்னும்
இவ்வெழுத்துக் கூறுபாடு பத்தும் இவ்வெழுத்தானாம்
 

     * “பூநான்கும் பொதுளிவெறி திசைநான்கும் போயுலவத், தேனார்ந்து சுரும்பாடத்
திகழ்பிண்டி” (திருக்கலம்பகம், 1)