180

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
‘காணாது, மோய், [வருந்தி] முகந்து, விளித்து, குடைந்து, பெயர்த்து, மாறி, சேர்ந்து,
இயக்கி’ என முறையே செய்தென்னும் வினையெச்சமாகி மூவிடத்தைம்பாலுமேற்றன.
இனி, விளிப்பதும் என்றவும்மை எண்ணும்மை; பயிரும் என்றது பயிலுந்தொழில்
7பொறாஅதமரிய 8எ - ம் விழுமிது கழியாதாயினும் 9நெஞ்சினன் றுயருழந்தனன்”
10மூவிடத்தும் வினைக் குறிப்புமுற்று வில்லனாகி, முகத்தளாகி கையினராகி,
விழுமியதாகி, கையவாகி, நெஞ்சினேனாகி, கண்ணேமாகி, கண்ணினையாகி,
வலத்திலுடையவராகி’ என ஆகியென்னும் வினையெச்சந்தருங்குறிப்பாய்
மூவிடத்தைம்பாலு முறையேயாயின. 11எம்முள்ளான் எ - ம் 12 மூவிடத்தும்
வெந்துப்பின்வந்த, அஞ்சாயல்பெற்ற, கடற்றானைபெற்ற, பெருவரைமிசைநின்ற,
புன்றாளோமைநின்ற, வேட்கைபெற்ற, காதல்பெற்ற, தோள்பெற்ற வினைவேட்கைபெற்ற’
எனச் செய்தவென்னும் பெயரெச்சக்குறிப்பாயின. இவை இவ்வாறு
பெயர்தொடர்ந்தனவெனக்கொள்க. 13என்ற தொல்காப்பியனார்
கருத்தாகவுரைத்தலமையாதோவெனின் 14பிறிதுதொழில் 15சிந்தினராயர் 16பெயர்ந்தவாயர்

 (32)

இரண்டாவது வினையியல் முற்றிற்று.
 

மூன்றாவது
 

பொதுவியல்.
 

 

(351)

இருதிணை யாண்பெணு ளொன்றனை யொழிக்கும்
பெயரும் வினையுங் குறிப்பி னானே.

     என்பதுசூத்திரம்.

     இவ்வோத்து 1என்னுதலியதோவெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது
பெயருரைப்பவே விளங்கும். ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், பெயர்
வினை இடை யுரி யென்னும் நான்கு சொல்லின் இயல்பும் உணர்த்திற்றாதலாற்
பொதுவிய லென்னும் பெயர்த்து; மேலோத்தினோடு இதற்கு இயைபு
என்னையோவெனின், கீழ்ப்போன பெயரையும் வினையையும் மேல்வரும் இடையையும்
உரியையும் நோக்கிநிற்றலிற் சிங்க நோக்கெனக்கொள்க.

     இவ்வோத்தினுள், இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பெயர்க்கும்
வினைக்கும் உரியதோரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இருதிணையிடத்தும் ஆண்மைப்பொருளினும் பெண்மைப் பொருளினும்
ஒன்றனையொழிக்கும், அவ்விருபாற்கும் பொதுவான பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்
குறிப்பினான் எ - று.