வ - று. வடுகரசர் 2ஆயிரவர் மக்களையுடையார், “மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல், அம்மனைக்கோ லாகிய ஞான்று” (நாலடி. 14) எ - ம், பெருந்தேவி 3பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்களுளர், இது, பத்து மானிடத்தின் முலைப்பால் எ - ம் உயர்திணைப்பெண்ணொழிபெயரும் ஆணொழிபெயரும் வந்தவாறு. அரசர் ஆயிரவர்மக்களொடு தாவடிபோயினார், இன்று இச்சேரியாரும் அச்சேரியாரும் பொருப எ - ம், இன்று இவ்வூராரெல்லாம் தைந்நீராடுப, குறுங்கானம்போப எ - ம் உயர் திணைப்பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தவாறு. நம்மரசன் ஆயிரம்யானையுடையன் எ - ம், நம்பி நூறு எருமையுடையன் எ - ம் அஃறிணைப் பெண்ணொழிபெயரும் ஆணொழிபெயரும் வந்தவாறு. இன்று இவ்வூர்ப்பெற்றமெல்லாம் உழவொழிந்தன எ - ம், இன்று இவ்வூர்ப்பெற்றமெல்லாம் அறத்திற்கேகறக்கும் எ - ம் அஃறிணைப் பெண்ணொழி வினையும் ஆணொழி வினையும் வந்தவாறு.
(பி - ம்.) 1என்னுதலியெடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின் 2ஆயிர மக்களையுடையர் இவண்மாட்டுங்காழிலா மம்மர் 3புறையுயிர்த்த | (1) | | (352) | பெயர்வினை யிடத்து னளரய வீற்றயல் ஆவோ 1வாகலுஞ் செய்யுளு ளுரித்தே. | எ - ன், செய்யுட்காவதோர் 2முறைமையுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பெயர்வினைகளின் ஈற்றில் நின்ற னளரயக்களின் அயலிலுள்ள ஆகாரம் ஓகாரமாகவும்பெறும், செய்யுளுள் எ - று.
உம்மையால், ஆகாமலும் உரித்தென்றவாறு.
வ - று. “வில்லோன் காலன கழலே தொடியோள், மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர், யார்கொ லளியர் தாமே” (குறுந். 7), “பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறநா.2) எ - ம்; “படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்” (புறநா. 194), “3நல்லை மன்னென நகூப்பெயர்ந்தோளே” (அகநா. 248), “சென்றோ ரன்பிலர் தோழி” (அகநா. 331), “வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப” (அகநா. 80) எ - ம் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் வந்தவாறு.
(பி - ம்.) 1வாதலும் 2இலக்கணம் உணர்த்துதல், நுதலிற்று.3 (1) நல்லண்மன்றங்கூய்ப்பெயர்ந்தோளே; (2) நல்லோண்மன்ற | (2) | | (353) | உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினும் திரியா தத்த 1மீற் றுருபி னென்ப. | எ - ன், வேற்றுமையுருபுகட்கும் வினைச்சொற்கட்கும் ஆவதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) எண்வகைவேற்றுமையுருபுகளும் மூவகை வினைச்சொற்களும் எதிர்மறுத்துச் சொல்லுமிடத்தும் தத்தம் ஈற்றுருபுகளின் வேறுபடா எ - று. | |
|
|