182

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     வ - று. ஆவாராது, மரத்தைக்குறையான், சாத்தனொடுசேரான்,
தேவர்க்குச்சிறப்பெடான், மலையின் இழியான், சாத்தனது அன்று, ஊர்க் கண்இரான்,
சாத்தாசாயல் (சாயாதே)என எட்டு வேற்றுமையுருபும் திரியாதுவந்தன.
உண்ணான்சாத்தன், 2(கொடான், கொடாள், கொடார், கொடாது, 3கொடா, கொடேன்,
கொடேம், கொடுக்கிலை, கொடுக்கிலீர்) + (சாத்தற்கு) என முற்றுவினை திரியாதுவந்தன.
(உண்ணாத, தின்னாத) + (அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீயிர்)
எனப் பெயரெச்சம் திரியாது வந்தன.

     இவை, உண்ணா, தின்னாவெனத் திரிவ வன்றோவெனின், அவை, உண்ணாத,
தின்னாதவென்பனவற்றைக் குறைத்துவழங்குகின்றாரென்க. இதற்கு முக்காலத்திற்கும்
ஒன்றே எதிர்மறையென்க.

     (செய்யாது) + (வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம்,
வந்தாய், வந்தீர்) என வினையெச்சம் திரியாது வந்தது,

     (பி - ம்.) 1மீற்றுரு பென்ப 2முற்றுவினைதிரியாதுவந்தன 3கொடா தவை
4ஏனைவினையெச்சங்களுக்கும் எதிர்மறையுரியவுளவேற் காண்க.
 
 

(354)

உருபுபல வடுக்கினும் வினைவே றடுக்கினும்
ஒருதம் மெச்ச மீறுற முடியும்.

     இதுவுமது.

     (இ - ள்.) உருபொன்றே அடுக்கியும் பல மயங்கியடுக்கியும் வினைச்சொற்கள்
மூன்றும் தம்முள் விரவாது வேறுவேறடுக்கியும் வந்தாலும், தத்தமெச்சம் 1இறுதியிலே
யொன்றுவர அதனோடு அனைத்தும் முடிவனவாம் எ - று.

     ‘வினைவேறடுக்கினும்’ எனவே உருபுகள் தம்முள் மயங்கியுமடுக்குமென்க.

     வ - று. “கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையா 2ளூரா
ணியல்பினாள் - உட்கி, இடனறிந் தூடி யினிதி னுணரு, மடமொழி மாதராள் பெண்”
(நாலடி. 384), “காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட, வேலார் 3வெருவந்த
தோற்றத்தார் - காலன், கிளர்ந்தாலும் போல்வார் கிணைப்பூசல் கேட்டே, உளர்ந்தார்
நிரைப்பெயர்வு முண்டு” (பு. வெ. 2 : 2) என 4இவை ஓருருபு அடுக்கித் தமக்கேற்ற
ஒருபெயரும் ஒருவினையும் இறுதிவர முடிந்தன. 5யானையது கோட்டை
நுனிக்கட்பொருட்கு வாளாற் குறைத்தானென இது 6பலவும் மயங்கியடுக்கி இறுதி
ஒருவினைகொண்டு முடிந்தது. பிறவுமன்ன.

     (உண்டான் தின்றான் ஓடினான் பாடினான்) + (சாத்தன்), “வருதி பெயர்தி
வருந்துதி துஞ்சாய், பொருதி புலம்புதி நீயுங் - கருதுங்காற், 7பண்டினை யல்லையாற்
பாழித்தோட் கோதையைக், கண்டனையோ வாழி கடல்” எ - ம், “இளையண்
மெல்லியண் மடந்தை, அரிய சேய பெருங்கான் யாறே” ( “எம்மூரல்லது” என்னும்
செய்யுள்) 8எ - ம் வினை வினைக்குறிப்புமுற்று விரவாது அடுக்கி ஒரு