பெயரொடுமுடிந்தன. “நெல்லரியு மிருந்தொழுவர், செஞ்ஞாயிற்று வெயின்முனையிற், றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து, திண்டிமில் வன்பரதவர், வெப்புடைய மட்டுண்டு, தண்குரவைச் சீர் தூங்குந்து, தூவற் கலித்த தேம்பாய் புன்னை, மெல்லிணர்க்கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து, வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல், முண்டகக் கோதை யொண்டொடி மகளிர், இரும்பனையின் குரும்பைநீரும், பூங்கரும்பின் றீஞ்சாறும்; ஓங்குமணற் குவவுத் தாழைத், தீநீரோ டுடன்விராய், முந்நீருண்டு முந்நீர்ப் பாயும், தாங்கா விளையு ணல்லூர் கெழீஇய”, (புறநா. 24) எ - ம், “சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்”, (சீறடிப்பேரகல்) 9எ - ம், பெயரெச்சவினையும் குறிப்பும் அடுக்கிவந்து ஒருபெயர்கொண்டன. “சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் றோற்றம்போல், மெல்லவே கருவிருந் தீன்று மேலலார், செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூற், கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே” (சீவக. 53), “நாளன்று போகிப் புள்ளிடைதட்பப், பதனன்று புக்குத் திறனன்று மொழியினும், வறிது10பெயர் குவ ரல்லர்” (புறநா. 124) எ - ம் வினையெச்சவினையும் குறிப்புமடுக்கி ஒருவினை கொண்டன. 11 “எனைத்துமுற் றடுக்கினு மனைத்துமொரு பெயர்மேல், நினைத்துக்கொள நிகழு நிகழ்த்திய முற்றே, வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும், பலபல வடுக்கினு முற்று12மொழிப்படிய” என்பது அகத்தியம்.
(பி - ம்.) 1இறுதியிலேவரின் அதனோடாதியினடுக்கினவுருபுகளும் வினைகளுந் தமக்கு ஏற்றபெயரும் வினையும்கொண்டு முடிவனவாமென்றவாறு 2 (1) ளூர்காணியல்பு, (2) ளூர்நாணியல்பு 3 வெருவருதோற்றத்தார் 4 இவை மாதராள் பெண்ணென்றும், வெருவருதோற்றத்தார் உளர்ந்தாரென்றும் எழுவாயுருபுபலவடுக்கித் 5கிணைப்பூசல் - பறைமுழக்கம். யானையது 6பலமயங்கி 7 (1) பண்டையை, (2) பண்டின்னை8 எ - ம் படர்க்கை வினைமுற்றும் முன்னிலை வினைமுற்றும் வினைக்குறிப்பு முற்றும் விரவாதடுக்கி, ‘சாத்தன், கடல், மடந்தை’ எனத் தமக்கேற்ற பெயர்கொண்டு முடிந்தன. 9 எ - ம் ‘பாயுந்து......பாயுந்து’ செய்யுமென்ற பெயரெச்சம் விளையுளென்றபெயர்கொண்டும், சிறிய பெரிய என்ற பெயரெச்ச வினைக்குறிப்பு 10போகுவரல்லர் எ - ம் ‘மெல்லவேகருவிருந்து’ என்னும் செய்தென்ற வினையெச்சமும், நாளன்றென்ற நாளன்றி என்ற வினையெச்சக்குறிப்பும் அடுக்கிவந்து ஒருவினைகொண்டன. வினையாவது ‘காய்த்த’ என்றதும் ‘போகுவரல்லர்’ என்றதுமாம். சொல் - நெல். தட்ப - தடுப்ப. 11 “ஏனை முற்றடுக்கினும்.......12மொழிப்படியே” என்பது அகத்தியம் | (4) | | (355) | உருபு முற்றீ ரெச்சங் கொள்ளும் பெயர்வினை யிடைப்பிற வரலுமா மேற்பன. | இதுவுமது.
(இ - ள்.) உருபுகளும் முற்றுவினைகளும் பெயரெச்ச வினையெச்சங்களும் தாம்தாம்கொள்ளும் பெயர்க்கும் வினைக்கும் நடுவே ஆண்டைக்கு ஏற்பனவான பிறசொற்கள் வரவும்பெறும் எ - று. | |
|
|