184 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | உம்மையான் 1வரப்பெறுதல் ஒருதலையல்லவென்க.
வ - று. சாத்தன் பகல் வயிறாரவுண்டான், அறத்தை அழகு 2பெருகச் செய்தான், வாளானே மருவாரை மாய வெட்டினான், தேவர்க்குச் செல்வம் வேண்டிச் சிறப்பெடுத்தான், மலையினின்று உருண்டு வீழ்ந்தான், சாத்தனது இத்தடக்கையானை, ஊர்க்கணுயர்ந்த வொளிமாடம், சாத்தா கூத்தற்குக் கூறைகொடு எ - ம், “பாடினான் றேவகீதம் பண்ணினுக் கரசன்” (சீவக. 2052), “அழுதா டடமாக வணங்கிழையே” (சீவக. 1523) எ - ம், “கொன்றுருத்த கூர்வேலவர்க் குறுகி”, “ஒட்டார், செவிபுதைக்குந் தீய கடுஞ்சொற் 3கவியுடைத்தாய்” (‘பல்யானை மன்னர்’ என்னும் செய்யுள்) எ - ம், “அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில், உளமெலி மகளிரினொடுங்கு மென்பவே” (சீவக. 49), “முரிந்துபோ தவிழ்ந்துகொங் குயிர்க்கு முல்லையின்” (சீவக. 48), 4 எ - ம், முறையே ஏற்பன இடைவந்தன. “உப்பின்று, புற்கை யுண்கமா கொற்கை யோனே” என வினையெச்சக் குறிப்பினும் இடைவந்தது. பிறவு மன்ன.
‘ஏற்பன’ எனவே ஏலாதன வரப்பெறாவென்பதாம். அவை வல்ல மெறிந்த நல்லிளங்கோசர்தந்தை மல்லல்யானைப் பெருவழுதி 5என்பதனுள், வல்லமெறிதல் பெருவழுதிமேற்றேயெனின், நல்லிளங்கோசர்தந்தையென்பதனை இடைநிறுவின், ஏலாதாம்; வல்லமெறிந்த மல்லல்யானைப் பெருவழுதி நல்லிளங்கோசரது தந்தையெனின், எற்பதாம். பிறவுமன்ன.
(பி - ம்.) 1(1) வருதலொருதலை; (2) வரவு ஒருதலை 2பெருக்கச்செய்தான் 3அவியுடைத்தாய்க் கற்றாரெனச் செய்த செய்யுமென்னும் பெயரெச்சமும் 4என, அழுங்கி, போதவிழ்ந்தென்ற வினையெச்சங்களும், உண்டான் பண்ணினுக்கரசன் அணங்கிழை வேலவர், சொற்கவி, ஒடுங்கும், உயிர்க்கு மென முறையே பெயரும் வினையுமேற்றவிடத்திடை 5‘என்றா’ல் வல்ல மெறிதல். | (5) | | (356) | எச்சப் பெயர்வினை யெய்து மீற்றினும். | இதுவுமது.
(இ - ள்.) உருபு முற்று 1பெயரெச்ச வினையெச்சங்களென்பனவற்றிற்கு எச்சமாய்வரும் பெயரும் வினையும் அவற்றின் ஈற்றின் கண்ணேயும் வந்து நிற்கும் எ-று.
2உம்மையால், முதற்கணிற்கவும்பெறுமென்க.
வ - று. சாத்தன்வந்தான், மரத்தைக்குறைத்தான், சாத்தனொடுவந் தான், சாத்தற்குக்கொடுத்தான், சாத்தனினீங்கினான், சாத்தனதுஆடை, சாத்தன்கட்சென்றான், சாத்தாவா என ஈற்றின்கண்வந்தன; வந்தான் சாத்தான், குறைத்தான்மரத்தை, வந்தான் சாத்தனொடு என (ஏனையவற்றோடும்) முதலின்கண்ணே வருவித்துக் காண்க. உண்டான்சாத்தன், | |
|
|