3. - பொதுவியல்

185

   
உண்டாள்சாத்தி, உண்டார்சாத்தர், உண்டதுஅது, உண்டனஅவை, உண்டேன்யான்,
உண்டேம்யாம், உண்டாய்நீ, உண்டீர்நீயிரென ஈற்றின்கண் வந்தன; சாத்தனுண்டான்,
சாத்தியுண்டாள், சாத்தருண்டாரென (ஏனையவற்றோடும்) முதலிலே வருவித்துக்காண்க.
3உண்டுவந்தான், உண்டுவந்தாள், உண்டுவந்தார் எ - ம், வந்தானுண்டு, வந்தாளுண்டு,
வந்தாருண்டு எ - ம் (இவ்வாறு ஏனைப் பாலிடங்கடோறுமொட்டி) வினையெச்சம்
இருவழியும் வந்தவாறுகாண்க. உண்டசாத்தன், உண்டசாத்தி, உண்டசாத்தரென (இவ்வாறு
ஏனைப்பாலிடங்கடோறுமொட்டிப்) பெயரெச்சத்திறுதிவந்தவாறு காண்க. பெயரெச்சத்தின்
முதற்கட் பெயர் வாராது; ஏனெனின், அது, சாத்தனுண்டவென அஃறிணை வாய்பாடாக
முடியுமாதலாலெனக் கடாவிடை காட்டிமறுக்க.

     (பி - ம்.) 1பெயரெச்சம் வினையெச்சமென்பனவற்றிற்கு 2உம்மை யான்
முதற்கணிவ்வாறு பெயரும்வினையு நிற்குமென்பதற்கு இச்சூத்திரஞ் செய்தாரென்க
3உண்டசாத்தன், உண்கின்றசாத்தன், உண்ணுஞ்சாத்தன் எனப் பெயரெச்சத்திறுதி
வந்தவாறுகாண்க. உண்டுவந்தான்

(6)

 

(357)

ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே.

     எ - ன், பெயர்ச்சொல் வினைச்சொற்கட்கு எய்தியதோர் விதியுணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் 1ஒன்றேநின்று ஒழிந்த
தன்னினங்களையும் தழுவுதற்கு உரித்தாம் எ - று.

      “தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடி” (நாலடி. 43) எ - ம்,
நஞ்சுண்டான்சாம், பார்ப்பான்கள்ளுண்ணான் எ - ம் நின்ற ஒருமொழிகள் தமக்கு
இனமான தீம்பூ இலவங்கம் சாதி முதலானவுந்தின்று எ - ம், நஞ்சுண்டாள்சாம்,
நஞ்சுண்டார்சாவர், நஞ்சுண்டதுசாம், நஞ்சுண்டவைசாம் எ - ம், பார்ப்பனியும்
கள்ளுண்ணாள், பார்ப்பாரும் கள்ளுண்ணார் 2எ - ம் தமக்கினமானவற்றையும்
தழுவிநின்றவாறுகாண்க. பிறவுமன்ன.

      “ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப”
(பொருளியல், சூ. 28) என்றார், மெய்ந்நூலார் தொல்காப்பியனார்.

     (பி - ம்.) 1ஒன்றெனினும்ஓழிந்த 2எ - ம், பெயராகும் தக்கோலமும் வினையாகும்
உண்டானென்பதும் பார்ப்பானென்பதும் முதலினின்று ஒழிந்தவையெல்லாந்
தழுவிநின்றவைகாண்க. “ஒருபாற்கிளவி யேனப்பாற் கண்ணும் வருவனதாமே
வழக்கெனப்படுமே” என்றார் முன்னூலார் தொல்காப்பியனாரு மென்க.

(7)

 

(358)

பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல்வருஞ் சிறப்புப் பெயர்வினை தாமே.

     இதுவுமது.