| 186 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (இ - ள்.) திணைபாலிடங்கட்குப் பொதுவாய்நின்ற பெயர்வினைக ளுடைய பொதுமையைநீக்கி ஒன்றற்கு உரித்தாக்கும், அவற்றின் மேல் வரும் பொதுவல்லாப் பெயரும் வினையும் எ - று.
எனவே பொதுவான 1பெயர்வினைகள்வந்தால், விளங்காவென்றவாறு.
வ - று. சாத்தன், முடவன், முடக்கொற்றன், தந்தை என்பன 2இருதிணைக்கும் பொதுவானபெயர்; இவற்றைச் சாத்தன் இவன்மகன், சாத்தன் இதன்மகன்; முடவன் இவன்மகன், முடவன் இதன்மகன்; முடக்கொற்றன் இவன்மகன், முடக்கொற்றன் இதன்மகன்; சாத்தன்தந்தை இவன், சாத்தன்றந்தை இது எனச் சிறப்புப்பெயர் ஒருதிணைக்கு உரிமை செய்தன. (சாத்தன்) + (வந்தான், வந்தது) (முடவன்) + (வந்தான், வந்தது) (முடக்கொற்றன்) + வந்தான், வந்தது) (தந்தை) + (வந்தான், வந்தது) 3எனச் சிறப்புவினை ஒருதிணைக்கு உரிமைசெய்தன. சாத்திமுதற்4பெயர் முதலானவற்றிற்கும் இவ்வாறேகொள்க. யான், யாம் எ - ம், நீ, நீயிர் எ - ம் வரும் தன்மைமுன்னிலைப்பெயர்கள் சிறப்புப்பெயராலன்றி வினையால் திணையும் பாலும் விளங்கா; அவை: யான்பாணன், யான்பாடினி; யான் கடுவன், யான் பேடை; (யாம்) + (அரசர் அரிவையர், சேவல்கள், பேடைகள்) எ - ம், (நீ) + (நம்பி, நங்கை, சேவல், பேடை); (நீயிர்) + (புலவிர், விறலியிர், சேவலிர், பேடையிர்) எனச் சிறப்புப்பெயரால் திணைபால் விளங்கின. உண்ணும், வாழ்க, வேறு, இல்லை, உண்டு என்பன திணைபாற்குப் பொதுவான முற்றுவினை. இவற்றை, (உண்ணும்) + (நம்பி, நங்கை, போத்து, நாகு, நாடு, நல்லன) எ - ம், (வாழ்க) + (நம்பி, நங்கை, நல்லோர், போத்து, நாகு, நாடு, நல்லன, யான், யாம், நீ, நீயிர்) எ - ம், (வேறு) + (நம்பி, நங்கை, நல்லோர், போத்து, நாகு, நாடு, நல்லன, யான், யாம், நீ, நீயிர்) எ - ம், (இல்லை) + (நம்பி, நங்கை, நல்லோர், போத்து, நாகு, நாடு, நல்லன, யான், யாம், நீ, நீயிர்) எ - ம், (உண்டு) + (நம்பி,.......நீயிர்) எ - ம் பெயர் ஒன்றற்கு உரிமைசெய்தன. பெயரெச்சவினை: உண்ட, உண்ணா நின்ற, உண்ணுமென்பன. இவற்றை, (உண்ட) + (நம்பி, நங்கை, நல்லோர், போத்து, நாகு, நாடு, நல்லன, யான், யாம், நீ, நீயிர்) எனப் பெயர் ஒன்றற்கு உரிமைசெய்தன. ஒழிந்தனவிரண்டும் இன்ன. உண்டென்பது வினையெச்சப்பொது. இதனை (உண்டு) + (வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம், வந்தாய், வந்தீர்) என வினை ஒன்றற்குரிமை செய்தன. பிறவுமன்ன.
இனி, வருவன்யான், வருதும்யாம்; வருதிநீ, வருதிர் நீயிர்எ - ம், யான்வந்தேன், யாம்வந்தேம், நீ வந்தாய், நீயிர்வந்தீர் எ - ம் இவ்வாறு வரும் பெயர்வினைகளான் விளங்காதவாறுகாண்க.
(பி - ம்.) 1பெயரும்வினையும்வந்துபுணர்ந்தால் சிறப்புப்பெயர் விளங்காவெனக்கொள்க. 2பொதுவாகியமுதற்பெயரும் சினைப்பெயரும் சினைமுதற்பெயரும் முறைப்பெயரும் ஆம்; இவற்றைச் சாத்தனிவன் 3என வினை 4முதற்பெயர்க்கும் இன்னன ஒட்டிக்கொள்க. இனியான். | (8) | |
|
|