| 188 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | (குறள். 281) எ - ம், “சிறுவரையே யாயினுஞ் செய்தநன் றல்லால், உறுபயனோ வில்லை யுயிர்க்கு” (நாலடி. 130) எ - ம் வரும் இவை தன்னை எள்ளாமைவேண்டுவானென்பான் கள்ளாமை காக்க தன் நெஞ்செனவும், தன்னாற்செய்யப்பட்ட நன்றல்லது உயிர்க்கு உறுபயனில்லை யெனவும் உருபுச்சொற்கள் எஞ்சவந்தன, எப்பாற்படுமோ வெனின், உருபுச்சொற்களும் வினை வினைக்குறிப்பாயடங்குதலின், வினையெச்சத்தின்பாற்படுமென்க.
‘தன்னை’ என்றது, தானடக்கும ஒழுங்கையெனவும், ‘தன்னால்’ என்றது, தன் தொழிலினாலெனவும் வினை வினைக்குறிப்பினால் விளங்குதலால், எட்டுருபுமேற்ற சொற்களும் வினை வினைக்குறிப்பென்றறிக.
“இலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந், தலங்கன்மாலைஇய விழ்ந் தாடவா டும்மிவள்”, “கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை வந்த வன்பறழ்க் குமரி, இருதோ டோழர் பற்ற” எனவரும் இவை, இருகையும் வீசியெனவும் இருதோளும் பற்றவெனவும் உம்மைகொண்டு முடிதலின், உம்மையெச்சமாயின.
“பூண்ட, மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே, கடியென்றார் கற்றறிந் தார்” (நாலடி. 56), “செய்யீரோ வென்னானு மென்னுஞ்சொற் கின்னாதே, பையத்தாஞ் செல்லுநெறி” (நாலடி. 309), “கைம் மாலை யிட்டுக் கலுழ்ந்தா டுணையில்லார்க், கிம்மாலை யென் 3செய்வ தென்று” (நாலடி. 393), “4இசையா வொருபொரு ளில்லென்றல் யார்க்கும், வசையன்று” (நாலடி. 111) எனவரும் இவை, கடியென்று சொன்னாரெனவும், செய்யீரோவென்னானு மென்றுசொல்லும் சொற்கெனவும், இம்மாலை என்செய்வதென்று சொல்லியெனவும், 5இசையா வொருபொருளில்லென்று சொல்லுதலெனவும் சொல்லென்பது கொண்டுமுடிதலின், சொல்லெச்சமாயின.
“அறிமி னறநெறி யஞ்சுமின் கூற்றம், பொறுமின் பிறர்கடுஞ்சொற் போற்றுமின் வஞ்சம், வெறுமின் வினைதீயார், கேண்மையெஞ் ஞான்றும், பெறுமின் பெரியோர்வாய்ச் சொல்” (நாலடி. 172) என்னும் இதனுள், ஒருவழிநின்ற எஞ்ஞான்றுமென்றதனைப்பிரித்துப் பிறவழியும் கூட்டி முடிக்கவேண்டுதலிற் பிரிநிலை எச்சமாயிற்று; இதனை 6விளக்குமென்ப.
“எடுத்தலும் படுத்தலு மாயிரண் டல்லது, நலித லில்லை யென்மரு முளரே”, “வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடங் - கூடார், பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா, இரும்புலி சேர்ந்த விடம்” (பு. வெ. 3 : 19) எனவரும் இவை, எடுத்தலும் படுத்தலுமென அவ்விரண்டல்லதெனவும், இரும்புலி சேர்ந்த இடமென வியப்பாமாலெனவும் எனவென்பது கொண்டுமுடிதலின், எனவெனச்சமாயின.
“செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை, காணிற் கிழக்காந் தலை” (குறள். 488), “இன்னா செயினு மினிய வொழிகென்று, தன்னையே தானோவி னல்லது - துன்னிக், கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட, விலங்கிற்கும் விள்ள லரிது” (நாலடி. 76) எனவரும் இவை | |
|
|