3. - பொதுவியல்

189

   
கிழக்காந்தலையென்ப தன் துணிபுதோன்றுதற்கு ஒழிக்கப்பட்ட
அவர்கெடுவரென்பதையும், கலந்தாரைக்கைவிடுதல் அருமைதோன்றுதற்கு ஒழிக்கப்பட்ட
மக்கட்கெளிதோ வென்பதையும் கொண்டுமுடிதலின், ஒழியிசை யெச்சமாயின.
இசையென்பது சொல்.

      “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார், இறைவ னடிசேரா தார்” (குறள். 10),
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம், போக்கு மதுவிளிந் தற்று” (குறள்.
332), “நேரல்லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது, தாரித் திருத்த றகுதிமற் - றோரும்,
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம், 7சமழ்மையாக் கொண்டு விடும்” (நாலடி.
72) என வரும் இவை, சேர்ந்தார் நீந்துவரெனவும், கூத்தாட்டவைக் குழாத்து வரவு
எற்று அற்று அவர்பெற்ற பெருஞ்செல்வத்து வரவெனவும், தாரித்திராது வெகுடல்
புகழ்மையாகக் கொள்ளாதெனவும் இவற்று எதிர்மறை கொண்டு முடிதலின், எதிர்மறை
யெச்சமாயின.

     இனி இசையெச்சமாவது, ஒன்றுசொல்ல அச்சொல்லானே வேறொரு
பொருளிசைத்தல். அஃதாவது இரட்டுற மொழிதலென்றவாறு; “உஞ்சையரச னொருமகன்
றோழன்றன், நெஞ்சிற் கினியா னெறித்துணை யாக்கொண்டு, பந்தெறி 8பாணிய பாய்பரி
மாவொடு, வந்தன னடிவலஞ் செய்வதற் கென்றான்”, “வந்தவர வென்னையென
வாட்கண்மட வாய்கேள், சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரியாட, வந்திலதி னாயபய
னென்னைமொழி கென்றாள், முந்தைநலி கின்றமுது மூப்பொழியு மென்றான்” (சீவக.
2020) எனவருமிவை, இச்சொன்ன பொருளொழிய வேறு இசைந்தபொருள் கொண்டு
முடிதலின், இசையெச்சமாயின. இதைச் சிலேடையுமென்ப.

      “பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டம், சால மிகுத்துப் பெயின்” (குறள். 475),
“கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு, நாவாயு மோடா நிலத்து” (குறள். 496),
“மாவென மடலு மூர்ப பூவெனக், குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப, மறுகி
னார்க்கவும் படுப, பிறிது மாகுப காமங்காழ் கொளினே” (குறுந். 17) எனுமிவை
முறையே, மெலியரும் பலர் தொகின், வலியராகுப; இவ்விடம் இவர்க்குச்செல்லும்,
இவ்விடம் இவர்க்குச்செல்லாதென அவ்வவர்க்கேற்ற இடனறிந்து கருமம் கொள்க;
யானும் அவ்வண்ணம் செய்வேனெனக் குறித்த பொருள்கொண்டு முடிதலிற்
குறிப்பெச்சமாயின. இதனை நுவலாநுவற்சியுமென்ப, பிறவுமன்ன.

     இந்தப் பத்தெச்சமும், புவிபுகழ் புலமை யவினய னூலுட் டண்டலங் கிழவன்
றகைவரு நேமி யெண்டிசை நிறைபெய ரிராச பவித்திரப் 9பல்லவ தரையன் பகர்ச்சி
யென் றறிக.

     இனி, இவற்றை இவ்வாறன்றி வினையியலுள்ளும் இடைச்சொல்லிய
லுள்ளுமொழிந்தனவாக்கி, உண்டசாத்தன், உண்ணுஞ்சாத்தன்; உண்டவூண்,
உண்ணுமூணென்பன பெயரெச்சம்; தம்பெயர் கொண்டன. உழுதுவந்தான்,
மருந்துண்டுநல்லனாயினான், உழுது வருதலென்பன வினையெச்சம்;