1. - எழுத்தியல்

19

   
பதமும் அப்பதம் தம்மோடும் உருபோடும் புணரும் புணர்ச்சியுமெனப் பன்னிரு 3
பகுதியினையுடைத்து, மேற்சொன்ன எழுத்திலக்கணம் எ - று.

     என்றாவென்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை.

     (பி - ம்.) 1 புணர்ப்பென 2 பொருட்பாகுபாடு 3 பகுதித்து
 

(2)

1. எழுத்தின் எண்

 

(57)

மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே.

     எ - ன், இயம்பப்பெறும் எழுத்தாவது இன்னதென்பதூஉம் அதன் பாகுபாடும்
உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) மொழிக்கு முதற்காரணமாகிய பரமாணுக்களது இயைபினான் ஆகுவதான ஒலி எழுத்தெனப்படும்; அது 1 முதலெழுத்தும் சார்பெழுத்துமென இரண்டுகூறாம் எ - று.

     ஈண்டு ஒலியெழுத்துச் சிறப்புடைமையின் எடுத்தோதினார். என்னை? “சிறப்புடைப் பொருளைத் தானெடுத்து மொழிதல்” என்பது தந்திரவுத்தியாகலான்.
ஒருசாரார்வேண்டும் உணர்வெழுத்து முதலான விகற்பமெல்லாம் இவ்வதிகாரப் புறநடை
(சூ. 256, உரை) யுட் கண்டு கொள்க.

     (பி - ம்) 1 முதலெழுத்துச் சார்பெழுத்தென

முதலெழுத்து

 

(58)

உயிரு முடம்புமா முப்பது முதலே.

     எ - ன், முதலெழுத்தாவன உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) உயிரென்றும் உடம்பென்றும் சொல்லப்பட்ட முப்பதெழுத்தும்
1முதலெனப்படும் எ - று.

     எனவே முதலெழுத்தெனத் தொகையான் ஒன்றும், உயிரெழுத்து
உடம்பெழுத்தென வகையான் இரண்டும், உயிர் பன்னிரண்டும் உடம்பு பதினெட்டு
மென்று வகுத்துக்கூட்ட விரியான் முப்பதுமாம், முதலெழுத்து எ - று. (4)

     (பி - ம்.) 1 முதலெழுத்தெனப்படும்
 

சார்பெழுத்து

 

(59)

உயிர்மெய் யாய்த முயிரள பொற்றள
பஃகிய இ உ ஐ ஒள மஃகான்
தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்.

     எ - ன், சார்பெழுத்தாவன உணர்த்துதல்நுதலிற்று.

     (இ - ள்.) உயிர்மெய்யும், ஆய்தமும், உயிரளபெடையும், ஒற்றளபெடையும்,
குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக்குறுக்கமும், ஒளகாரக்குறுக்கமும்,
மகரக்குறுக்கமும், ஆய்தக்குறுக்கமு மென்னும் இப்பத்தும் சார்பெழுத்தாம் எ - று.