| 190 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | வினையும் குறிப்பும் வினைப்பெயரும் கொண்டன. சாத்தனும் வந்தானென்பது உம்மையெச்சம்; கொற்றனும் வந்தானெனத் தன்னெச்சங் கொண்டது. “பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்றாள், நுசுப்போ வுலகம் பெறும்” என்பது சொல்லெச்சம்: இது தாவென்றுசொல்லிநின்றா ளெனச் சொல்லி யென்பதனைக் கொண்டது. அவனோ கொண்டான்; அவனே கொண்டானென்பன பிரிநிலையெச்சம்; இவை ஒரு குழுவிற் பிரிக் கப்பட்டானையே கொண்டன. கொள்ளெனக் கொண்டானென்பது எனவெனெச்சம்; இது கொண்டானென்னும் வினை கொண்டது. கொள்ளென்பது முற்று; அது முற்றேலாமையின், இறுதி எனவென்பது முற்றுக்கொண்டது. ஒழியிசை யெச்சமாவது, மன்னும் தில்லும் ஓவுமெனு மூன்றும்; அவை: பண்டு கூரியதோர் வாண்மனென்பது இப்போது கோடிற்று, இற்றதென்பவற்றையும், “வருகதில் லம்ம” (அகநா. 276) என்பது வந்தால் இன்னதொன்று செய்வலென்பதனையும், கொளலோ கொண்டானென்பது கொண்டுய்யப் போயினானல்ல னென்பதனையும் கொண்டு முடிந்தன. எதிர்மறை யெச்சம் இரண்டு; ஓகார வெதிர்மறை, உம்மை யெதிர்மறை யென. யானோகொண்டேனென்பது யான் கொண்டில னென்பதையும், வரலுமுரியனென்பது வராமைக்குமுரியனென்பதையும் கொண்டு முடிதலின் எதிர்மறை யெச்சம். ஒல்லென வொலித்ததென்பது ஒல்லென்ற அநுகரண ஓசையே இசைத்ததென்று முடிதலின், இசை யெச்சம். விண்ணென விசைத்ததென்பது விண்ணென்றதே விசைத்த தென்று முடிதலிற் குறிப்பெச்சம்; “சலங்கொண்டநோயின் நோவு விண்ணெனத் தெறித்தல்செய்யும்” என்னுங் குறிப்பினான், விண்ணென்றது குறிப்பெச்சமாயிற்றென்று இவ்வாறு சொல்லுவர்.
இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர்கேள்வி 10இளம்பூரண ரெனு மேதமின் மாதவ ரோதிய வுரையென் றுணர்க.
(பி - ம்.) 1 சொல்லொழியொன்பதும் 2 பெறப்பாடுஞ் சொல்லப்பட் டன3 செயாதென்று 4 இசையாதொருபொருள் 5 இசையாதொருபொருள் 6 நடுநிலைத்தீபமுமென்ப 7 (1) சமண்மையா, (2) சகண்மையா 8 பாணி யாய்பாய்பரி 9 பல்லவதரைசர் 10 இளம்பூரண ருரையெனத் தேறிய கவிஞர் கூறுபட வறிமின். | (9) | | | (360) | பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளி னவற்றி னுருபிடை ஒழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோ 1னடப்பன தொகைநிலைத் தொடர்மொழி. | எ - ன், மேல் தொடர்மொழி யென்றார், அது தொகைநிலைத் தொடரும் தொகாநிலைத் தொடருமென இரண்டாம்; அவற்றுள், தொகைநிலைத் தொடர்மொழியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. | |
|
|