3. - பொதுவியல்

191

   
     (இ - ள்.) பெயருடனே பெயரும் பெயருடனே வினையும் தம்முட் புணருமிடத்து,
வேற்றுமை முதலானவற்றின் பொருளிலே அவற்றின் உருபுகளை
இடையிடையேயொழித்து, இரண்டுசொல் முதலாகத்தொடர்ந்து ஒரு
பெயர்ச்சொற்போலவும் ஒரு வினைச்சொற்போலவும் வழங்குவன தொகைநிலைத்
தொடர்மொழிகளாம் எ - று.

     ஒருமொழிபோலாவது பலசொல்லேயெனினும் தொடர்ந்து ஒற்றுமைப் பட்டு
ஒருபெயராய் எட்டுவேற்றுமைகளையும் வினைகளையும் ஏற்றலும்,
நிலைமொழிவருமொழிகளாய்ப் புணர்ச்சிவகையேற்றலும், ஒருவினைச் சொல்லேயாய்ப்
பெயரேற்றல் முதலான வினையிலக்கண மெல்லாமேற்றலு மென மூவகையாகக்கொள்க.

     (பி - ம்.) 1நடப்ப தொகைநிலைத் தொடர்ச்சொல்

(10)

 

(361)

வேற்றுமை வினைபண் புவமை யும்மை
அன்மொழி யெனவத் தொகையா றாகும்.

     எ - ன், தொகைநிலைத்தொடர்மொழியது பெயரும் முறையும் தொகையும்
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வேற்றுமைமுதலான இவ்வாறுகூற்றதாம், மேற்சொன்ன தொகைநிலைத்
தொடர்மொழியாவது எ - று.

(11)

 

(362)

இரண்டு 1முதலா மிடையா றுருபும்
வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே.

     எ - ன், நிறுத்த முறையானே வேற்றுமைத் தொகையாமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ - ள்.) ஐ முதலாகக் கண் ஈறாகநின்ற ஆறுருபும் இடையே தோன்றாதுநிற்பது
வேற்றுமைத்தொகையாவது எ - று.

     வ - று. நிலங்கடந்தான், பொற்குடம், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை,
குன்றக்கூகையென இடையே தொக்கவாறு காண்க.

     இடையிலே தொகுமென்றதென்னை? கடந்தானிலம், இருந்தான்குன்றத்து,
“தண்வரல் வாடையும் பிரிந்திசினோர்க் கழலே” (குறுந். 35), “புள்ளினிர் மன்ற
வெற்றாக் குறுதலின்” (மலைபடு. 66) என்பன, நிலத்தை, குன்றத்தின்கண், அழலான்,
எற்றாக்குதலினாலென்று வேற்றுமையுருபுகள் ஈற்றினும் தொகுமாலோவெனின், அவை
ஒருபெயரனையவாய் உருபு முதலாயின ஏலாமையின், தொகைவிதியாற்றொக்கனவாகா;
செய்யுள் விகாரவகையால் தொகுக்கப்பட்டனவென்க.

     இனி இவை விரியுமாறு: நிலத்தைக்கடந்தான், பொன்னானாயகுடம், கரும்பிற்கு
வேலி, வரையின்வீழருவி, சாத்தனதுகை, குன்றத்துக்கட்கூகை யெனவிரியும்.2