இனி, தொல்காப்பியனார்க்குக் கரியனென்ற அன்னீறு தொக்கு நிற்பதென்றறிக. | (14) | | | (365) | உவம வுருபில துவமத் தொகையே. | எ - ன், உவமத் தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பண்பு, பயன், வினை, மெய் என்பனபற்றிவரும் உவம வுருபு தோன்றாதது உவமத்தொகையாம் எ - று.
வ - று. பான்மொழி, மாரிவண்கை, புலிப்பாய்த்துள், துடியிடை எனவரும்.
இவைவிரிவுழி, பால்போலுமொழி, மாரிபோலும்வண்கை, புலிபோலும் பாய்த்துள், துடிபோலுமிடையெனவிரியும்; இவ்வாறன்றி, பாலைப்போலுமொழி பான்மொழி யெனின், உருபுத்தொகையாகக் கொள்க; அஃதென்னையோவெனின், ஈண்டு உவமையான பாலோடு பொருளான மொழியைப் புணர்த்தலே கருத்தாகலின், பாலைப்போலு மொழியென்றவழிப் பால் கருமமாக அவ்வுருபிற்குப் போலுமென்பது பயனிலையாக அது மொழியென்னும் பெயர்கொள்ள உவமையோடு பொருட்குப் புணர்ச்சியின்றா மாகலினென்க. பிறவுமன்ன.
(பி - ம்.) 1 யென உருபுத் தொகையாகக் கொள்ளற்க. | (15) | | | (366) | போலப் புரைய வொப்ப வுறழ மானக் கடுப்ப வியைய வேய்ப்ப நேர நிகர வன்ன வின்ன என்பவும் பிறவு முவமத் துருபே. | எ -ன், மேல் உவமவுருபென்றார், அவை இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) இச்சொன்ன பன்னிரண்டும் இவைபோல்வன பிறவும் உவமவுருபுகளாம் எ - று.
வ - று. “வேந்தன், மனம்போல வந்த மகன்” (பு. வெ. 2 : 5), “உயிர்புரை யூகியோ டெண்ணி,” “என்னொப்பா 1ரிவ்வுலகி லில்”, “பகலுரு வுறழ நிலவுக்கான்று”, (அகநா. 122), “வரைபுகுபுள்ளினமான”, “அவிரறல் கடுக்கு மம்மென் கூந்தல்”, “காரியையுங் காவலன்றன் கை”, “செம்பவழ மேய்ப்பத் திகழ்ந்திலங்கும்”, “பொன்னேர்மேனி” (குறுந். 119), “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி. 64), “அரிமா னிடித்தன்ன வஞ்சிலை” (கலி. 15), “இன்னவிறலு முளகொல்” (புறநா. 19) எனவரும்.
பிறவென்றதனால் வேறு வருவனவுங் கொள்க.
(பி - ம்.) 1ரிவ்வுலகில் | (16) | |
|
|