194

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(367)

எண்ண லெடுத்தன் முகத்த னீட்டல்
எனுநான் களவையு ளும்மில தத்தொகை.

     எ - ன், உம்மைத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) எண்ணியும் எடுத்தும் முகந்தும் நீட்டியும் அளக்கப்படும் நால்வகை
அளவையின்கண்ணும் உம்மை தொக்கு நிற்பது, உம்மைத் தொகையாவது எ - று.

     வ - று. உவாப்பதினான்கு, கபிலபரணர், கல்லாடமாமூலர், பதினொன்று,
பதினைந்து, ஆயிரத்தொருநூற்றைம்பத்தொன்று எ - ம், கழஞ்சேகால்,
கழஞ்சரையேயரைமாவரைக்காணி முந்திரிகை எ - ம், நாழியாழாக்கு, கலனேமுக்குறுணி
நானாழியாழாக்கே முச்செவிடுஎ - ம், சாணரை எ - ம் வரும். இவை விரியுங்கால்
உவாவும் பதினான்கும், கபிலனும் பரணனும், கல்லாடனும் மாமூலனுமென விரியும்.
பிறவுமன்ன.

     உவாவையும் பதினான்கையுமென விரியுமேல் ஆண்டு வேற்றுமைத் தொகையாம்
பிறவெனின், 1வேங்கைமலரென்னும் வேற்றுமைத்தொகை வேங்கையது மலரெனவிரியும்;
உம்மை வேறில்லை, உவாவும் பதினான்கு மென்புழி உம்மை ஒருதலையாகவே
வேண்டலின், சிறப்பினால் உம்மைத் தொகையாகவே படுமென்பது.

     (பி - ம்.) 1வேங்கைமலரென்பது வேற்றுமைத்தொகைக்கு வேங்கையது

(17)

 

(368)

ஐந்தொகை மொழிமேற் பிறதொக லன்மொழி.

     எ - ன், அன்மொழித்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வேற்றுமை முதலான ஐவகையுருபுகளும் தொக்குநின்ற மொழிகளின்
மேலே அவற்றின் பொருள்களைத்தழுவிய வேற்றுப்பொருள்களும் அவற்றின்
சொற்களும் தொகுவது அன்மொழித் தொகையாவது எ - று.

     வ - று. பூங்குழல், பொற்றொடி, கவியிலக்கணம், பொற்றாலி, கிள்ளிகுடி,
கீழ்வயிற்றுக்கழலை எ - ம், தாழ்குழல், கருங்குழல், துடியிடை, தகரஞாழல் எ - ம்
காண்க. இவை விரிவுழி, பூவையுடைய குழலையுடையாள், பொன்னானாய தொடியினை
யுடையாள், கவிக்கு இலக்கணம் சொன்னநூல், பொன்னினாய தாலியினை யுடையாள்,
கிள்ளியது குடிமக்களிருக்குமூர், கீழ்வயிற்றின்கண்எழுந்த கழலையைப்போல்வான் எ-ம்,
தாழ்ந்த குழலினையுடையாள், கரிய குழலினையுடையாள், துடியன்ன
இடையினையுடையாள், தகரமும் ஞாழலும் உறுப்பாகவுடைய சாந்து எ - ம் விரியும்.1

     (பி - ம்.) 1ஆதலால் இரண்டுசொற்புணராது ஒருமொழிப்பெயராகிக் கமலம் கரும்பு
எனவந்தவை ஆகுபெயரும் முற்றுவமையுமாகுமல்லாது அன்மொழித் தொகையாகா
வென்றறிக.

(18)