| | (369) | முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி எனுநான் கிடத்துஞ் சிறக்குந் தொகைப்பொருள். | எ - ன், தொகைச்சொற்பொருள் நிற்குமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) தொகைச் சொற்களில் முதலில் நிற்கு மொழியிடத்துத்தான் பின்மொழிக்கட்டான் அனைத்துமொழிக்கண்ணுந்தான் அனைத்து மொழிக்கும் புறத்துத்தான் சிறந்துநிற்கும், தொகைச்சொற் பொருள்கள் எ - று.
ஈண்டு இடம் என்றதனாற் காலமுன்கொள்ளாது இடமுன்கொள்க.
வ - று. கால்வாய், அடைகடலென்பன வாயையுடையகால், கடலினது அடையென முன்மொழிப் பொருள்குறித்தன. வேங்கைப்பூ, கருங்குதிரை என்பன பின்மொழிப்பொருள் கருதின. இவை ஈரிடத்திற்கும் 1அவிநயத்திற் காட்டினவை. இனி, இளம்பூரணவாசிரியர் வேங்கைப்பூவென்பதனை முன்னிடத்திற்கும், அடைகடலென்பதனைப் பின்னிடத்திற்கும் காட்டுவர்; இருவர்மதமுமறிந்துகொள்க. இராப்பகல், தாய்தந்தை, அந்தணரரசர் வணிகர்வினைஞரென்பன அனைத்துமொழிப்பொருளும் கருதவந்தன பொற்றொடி, துடியிடை, தருசுரபி, பெய்ம்முகில் என்பன அவற்றையுடை யாரையும் ஒப்பாரையும் குறித்தமையின், புறமொழிமேல்நின்றன. பிறவுமன்ன.
(பி - ம்.) 1 அவிநயனார் | (19) | | | (370) | வல்லொற்று வரினே யிடத்தொகை யாகும் மெல்லொற்று வரினே பெயர்த்தொகை யாகும். | எ - ன், அத்தொகைக்கு 1ஏற்பதோர் விதியுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வல்லொற்று இடையேவந்துழிப் பெயரோடு இடம்தொக்கதாம்; மெல்லொற்று இடையேவந்துழிப் பெயரோடு பெயர்தொக்கதாம் எ - று.
வ - று. வடுகக்கண்ணனென்றால், வடுகநாட்டிற்பிறந்த கண்ணனென்றும், வடுகங்கண்ணனென்றால் வடுகற்குமகனாகிய கண்ணனென்றுமாம். இஃது எழுத்துமுடிபேனும் தொகையதிகாரப்பட்டமையான் ஈண்டுவைத்தாரென்க.
(பி - ம்.) 1 ஒப்பதோர் | (20) | | | (371) | உயர்திணை யும்மைத் தொகைபல ரீறே. | இதுவுமது.
(இ - ள்.) உயர்திணையிடத்துவந்த உம்மைத்தொகை பல்லோரைக் காட்டும் ரகரவொற்றாய் நிற்கும் எ - று.
வ - று. கபிலபரணர்வந்தா 1ரெனவும், சாத்தன் கொற்றன் வந்தா ரெனவும் வரும். இவைவிரியின், கபிலனும், பரணனும் வந்தார், சாத்தனும் | |
|
|