| 196 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | கொற்றனும் வந்தாரென்று ஆம், 2என்னை? “உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே, பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர்” (எச்ச. 25) என்றார் தொல்காப்பியனார். | (21) | | | (372) | தொக்குழி மயங்குந விரண்டு முதலேழ் எல்லைப் பொருளின் மயங்கு மென்ப. | எ - ன், தொகைச் சொற்பொருள் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) சொற்கள் தொக்குநின்றவிடத்து, மயங்கும் இயல்பினை யுடைய சொற்கள் (வேற்றுமைமுதலாக அன்மொழியீறாகச் சொன்ன ஆறுவகைப் பொருட்சொற்களும்), இரண்டுமுதலாக ஏழீறாகநின்ற 1பொருண்மேல் மயங்குமென்று சொல்லுவர் புலவர் எ - று.
‘தொக்குழிமயங்குந’ எனவே தொகாவிடத்து மயங்காவெனவும், ‘மயங்குநமயங்கும்’ எனவே மயங்கும் இயல்பில்லன மயங்காவெனவும் கொள்க.
வ - று. தெய்வவணக்கம், தற்சேர்ந்தார் (நாலடி. 93, 170) எ - ம், பொற்குடம், திரையனூர் எ - ம், நாகர் பலி, போர்நேர்ந்தார் எ - ம், வையைவடக்கு, நோய்நீங்கினான் எ - ம், யானைக்கூடம், கடற்றிரை எ - ம், ஊர்ப்புக்கான், ஊர்மனை எ - ம், அலர்முல்லை, தாழ்குழல் எ - ம், கோண்டுலாம், முந்நான்கு எ - ம், தளிரடி, தளவநகை எ - ம், பதினைந்து, தகர ஞாழல் எ - ம் வரும் இவை இரண்டு தொடர்ச்சிப் பொருள்மயங்கிய ஒரு தொடர்த் தொகைமொழி; இவை தெய்வத்தை வணங்கும் வணக்கம், தெய்வத்துக்கு வணக்கம்; தன்னைச் சேர்ந்தார், தன்பாற் சேர்ந்தார் எ - ம், பொன்னாற்செய்தகுடம், பொன்னினாயகுடம்; திரையனாற்செய்யப்பட்ட வூர், திரையனதூர் எ - ம், நாகர்க்குப்பலி, நாகரதுபலி; போர்க்கு நேர்ந்தார், போரைநேர்ந்தார் எ - ம், வையையின்வடக்கு, வையைக்குவடக்கு; நோயினீங்கினான், நோயைநீங்கினான் எ - ம், யானையது கூடம், யானைக்குக் கூடம்; கடலினதுதிரை, கடலின்கட்டிரை எ - ம், ஊரின்கட்புக்கான், ஊரைப்புக்கான்; ஊரின்கண்மனை, ஊரினுடையமனை எ - ம் வேற்றுமை யுருபுகள் முறையே மயங்கினவாறு.
இனி அலர்ந்தமுல்லை, அலரையுடைய முல்லை; தாழ்ந்தகுழல், தாழ்ந்த குழலினையுடையாளென வினையுருபு மயங்கியவாறு.
கோணாகியதுலாம், கோணையுடைய துலாம்; மூன்றாகியநான்கு, மூன்றனாற் பெருக்கப்பட்ட நான்கு எ - ம், தளிரன்ன அடி, தளிரை யொக்குமடி; தளவமன்னநகை, 2தளவத்தை யொக்கு நகை எ - ம், பத்துமைந்தும், பத்தின்மேலைந்து; தகரமுஞாழலும், தகரமுஞாழலுமுடையசாந்து எ - ம் 3வரும். | |
|
|