நெறிசெய்தான், பொற்றொடி, கடிப்பகை, வரையிழிந்தான், சான்றோரிலக்கணம், ஊர்க்குளம் எ - ம், ஒலிவளை, ஆனேறு, துடியிடை, ஏழேகால் எ - ம் வரும் இவை மூன்றுதொடர்ச்சிப்பொருள் மயங்கிய ஒருதொடர்த்தொகைமொழி; இவை நெறியைச்செய்தான், நெறியினாற்செய்தான், நெறியினிற்செய்தான்; பொன்னானாயதொடி, பொன்னினாயதொடி, பொன்னிற் செய்த தொடியையுடையாள்; கடிக்குப்பகை, கடியினதுபகை, கடியாகிய பகை; வரையினிழிந்தான், வரையையிழிந்தான், வரைக்கணிழிந்தான்; சான்றோரதிலக்கணம், 4சான்றோராற் செய்யப்பட்ட இலக்கணம், சான்றோர்க்கிலக்கணம்; ஊரின்கட்குளம், ஊரினது குளம், ஊர்க்குக்குளம் 5எ - ம், ஒலிக்கும்வளை, ஒலியையுடையவளை, ஒலிக்கும் வளையையுடை யாள்;6 ஆனாகிய ஏறு, ஆனின்கணேறு, ஆனேறனையான்; 7துடியன்ன இடை, துடியையொக்குமிடை, துடியன்ன இடையினையுடையாள்;8 ஏழும் காலும், ஏழின்மேற்கால், ஏழேகால் நிலமானவூர் எ-ம்9 வரும்.
சொல்லிலக்கணம், பொன்மணி எனவரும் இவை நான்குதொடர்ச்சிப் பொருள்மயங்கின ஒரு தொடர்த்தொகைமொழி; இவை சொற்கிலக்கணம், சொல்லது இலக்கணம், சொல்லும் இலக்கணமும், சொல்லிலக்கணஞ் சொன்னநூல் எ - ம், பொன்னானாயமணி, பொன்னினாயமணி, பொன்னின் கண்மணி, பொன்னுமணியும் எ-ம் 10வரும்.
கருப்புவேலி, இயலிசை எனவரும் ஐந்துதொடர்ச்சிப்பொருண் மயங்கின ஒருதொடர்த் தொகைமொழி; இவை, கரும்பாற்செய்தவேலி, கரும்புக்குவேலி, கரும்பினிற் செய்தவேலி, கரும்பினதுவேலி, கரும்பின் கண்வேலி எ - ம், இயலையுடையவிசை, 11இயலினிசை, இயற்கணிசை, இயலாகியஇசை, இயலுமிசையும் எ - ம் வரும்.12
நூலுரை, உரைவிரி எனும் இவை, ஆறுதொடர்ச்சிப்பொருள் மயங்கிய ஒருதொடர்த் தொகைமொழி. இவை நூலையொக்குமுரை, நூற்குரை, 13நூலதுரை, நூற்கணுரை, நூலன்னஉரை, நூலுமுரையும்எ - ம், உரையைவிரி, உரைக்குவிரி, உரையதுவிரி, உரைக்கண்விரி, உரைக்கும் விரி, உரைவிரியுடையது எ - ம் வரும்.14
கருத்துப்பொருள், சொற்பொருள் எனவரும் இவை ஏழுதொடர்ச்சிப் பொருள் மயங்கிய ஒருதொடர்த் தொகைமொழி; இவை கருத்தையுடைய பொருள், கருத்தினாலறியும்பொருள், கருத்திற்குப்பொருள், கருத்தினறியும் பொருள், கருத்தினதுபொருள், கருத்தின்கட்பொருள், கருத்தும்பொருளும் எ - ம், சொல்லான் அறியப்படும்பொருள், சொற்குப்பொருள், சொல்லின் அறியப்படும் பொருள், சொல்லதுபொருள், சொல்லின்கட்பொருள், சொல்லாகிய பொருள், சொல்லும் பொருளும் எ - ம் வரும். பிறவுமன்ன.
“வாளைமீ னுள்ள றலைப்படல்” (திரி. 8) என்பது இரண்டுதொடர்ச் சிப்பொருண்மயங்கிய பலதொடர்த் தொகைமொழி; இது வாளைமீனை உள்ளல் தலைப்படல், வாளைமீன் உள்ளலைத் தலைப்படலெனவரும். | |
|
|