198

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
      “புலி கொல்யானை” என்பது மூன்று தொடர்ச்சிப்பொருள் மயங்கிய
பலதொடர்த்தொகைமொழி; இது புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட
யானை, புலியினிற் கொல்லப்பட்ட யானை எனவரும்.

      “குரங்கெறிவிளங்காய்” (தொல். பாயிரம், மேற்) என்பது நான்கு தொடர்ச்சிப்
பொருள்மயங்கிய பலதொடர்த் தொகைமொழி; இது குரங்கை யெறிந்த விளங்காய்,
குரங்கால் எறியப்பட்ட விளங்காய், குரங்கிற்கு 15எறிந்த விளங்காய்,
குரங்கினெறியப்பட்ட விளங்கா யெனவரும். இவ்வாறு பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

     (பி -ம்.) 1 பொருளால் 2 தளவை யெள்ளுநகை 3 அன்மொழித்தொகை
வந்தவாறு, இரண்டுபொருண்மயக்கம்முற்றும் 4 சான்றோர்செய்த இலக்கணம் 5 எ - ம்
வேற்றுமைத்தொகை விரிந்தன. 6 எ - ம் வினைத்தொகை விரிந்தன. 7 எ - ம்
பண்புத்தொகைவிரிந்தன. 8 எ - ம் உவமத்தொகைவிரிந்தன 9 உம்மைத
்தொகைவிரிந்தன. மூன்று பொருண் முற்றும் 10 விரிந்துவரும். நான்குபொருண்முற்றும்11
இயலுமிசை. இயலுவதைச் செய்யுமிசை 12 ஐந்துபொருண்முற்றும் 13 நூலினுரை14 ஆறு
பொருண்முற்றும் 15 எறியப்பட்ட விளங்காய்

(22)

 

(373)

முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள்
ஆறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை.

     எ - ன், தொகாநிலைத் தொடர்மொழி இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) வினைமுற்று, வினைக்குறிப்பு முற்று, பெயரெச்சம், வினையெச்சம்,
எழுவாய்வேற்றுமை, விளிவேற்றுமைகள் தம்பொருளான பெயர்வினைகளோடு புணரும்
புணர்ச்சியும், ஆறுருபும், இடைச்சொல்லும், உரிச்சொல்லும் புணரும் புணர்ச்சியும்,
இரண்டுமுதலான அடுக்குமொழிகளும் தொகாநிலைத்தொடர் மொழிகளாம் எ - று.

     வ - று. உண்டான் சாத்தன், குழையன்கொற்றன், உண்டசாத்தன், உழுதுவந்தான்,
சாத்தன் உண்டான், சாத்தாகொள், சாத்தனை, சாத்தனால், சாத்தற்கு, சாத்தனின்,
சாத்தனது, சாத்தன் கண், “அதுகொ றோழி காம நோயே” (குறுந். 5), “நனிபே தையே
நயனில் கூற்றம்” (புறநா. 227), பாம்புபாம்பு என முறையே காண்க.

      “காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை” என்றமையால், காலந்தோன்றும்
பெயரெச்சம் தொகாநிலையாமென்க.

(23)

 

(374)

திணையே பாலிடம் பொழுது வினாவிறை
மரபா மேழு மயங்கினாம் வழுவே.

     எ - ன், வழுநிலையும் வழாநிலையும் உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) திணைமுதலான ஏழும் தத்தம் இயல்பன்றி மயங்கிவரின் அவை
வழுக்களாம் எ - று.