3. - பொதுவியல்

199

   
     மயங்கின் வழுவாமெனவே, மயங்காதுவருதல் வழாநிலையாமென்க. இவ்வாற்றானும்
1சொற்பகுத்து ஆராய்ந்தா2ராம். அஃதாவது, ஒன்று பிறிதின்மேற்சேறலும்
பிறிதினைக்கொண்டு முடிதலுமாமென்க.

     அவற்றுள், திணைவழு நான்காம்; தனித்திணைவழுவும், பாற்றிணைவழுவும்,
இடத்திணைவழுவும், பாலிடத்திணைவழுவுமென.

     அவற்றுள், தனித்திணைவழுவாவது:- பாலும் இடனுமின்றித் திணை தனியே
மயங்குவது. அது: வந்தான் அது, வந்தாள் அது, வந்தார் அவை எ - ம், வந்தது
அவன், வந்தது அவள், வந்தன அவர் எ - ம் இருதிணை வினைமேலும் இருதிணைப்
பெயர்வந்து மயங்கிய ஆறும்; அவன் வந்தது, அவள் வந்தது, அவர்வந்தன
எ - ம், அதுவந்தான், அதுவந்தாள், அவைவந்தார் எ - ம் இருதிணைப்பெயர் மேலும்
இருதிணைவினைவந்து மயங்கிய ஆறும் ஆகத் தனித்திணைவழுப் பன்னிரண்டாம்.

     இனி, பாற்றிணை வழுவாவது:- இடமயக்கமின்றிப் பாலும் திணையும் மயங்குவது.
அது: வந்தான் அவை, வந்தாள் அவை, வந்தார் அது எ - ம், வந்ததுஅவர், வந்தன
அவன், வந்தன அவள் எ - ம் இருதிணைவினைப்பான் மேல் இருதிணைப்பெயர்ப்பால்
மயக்கம் ஆறும்; அவன்வந்தன, அவள் வந்தன, அவர்வந்தது எ - ம், அதுவந்தார்,
அவைவந்தான், அவைவந்தாள் எ - ம் இருதிணைப் பெயர்ப்பால்மேல்
இருதிணைவினைப்பால்மயக்கம் ஆறும் ஆகப் பாற்றிணைவழுப் பன்னிரண்டாம்.

     இடத்திணைவழுவாவது:- பான்மயக்கமின்றி இடமும் திணையு மயங்குவது. அது :
வந்தான் சேவலேன், வந்தாள் பேடையேன், வந்தார் மான்களேம் எ - ம், வந்தது
பாணனேன், வந்தது விறலியேன், வந்தனவயவரேம் எ - ம் படர்க்கை
இருதிணைவினைமேல் தன்மையிருதிணைப்பெயர்மயக்கம் ஆறும்; வந்தான் கடுவனை,
வந்தாள் பேடையை, வந்தார் 3மான்களீர் எ - ம், வந்தது தலைவனை, வந்தது
தலைவியை, வந்தனமாந்தரீர் எ - ம் படர்க்கை யிருதிணைவினைமேல் முன்னிலை
யிருதிணைப் பெயர்மயக்கம் ஆறும்; சேவலேன் வந்தான், பேடையேன் வந்தாள்,
மான்களேம் வந்தார் எ - ம், பாணனேன் வந்தது, விறலியேன் வந்தது, 4மல்லரேம்
வந்தன எ - ம் தன்மை யிருதிணைப்பெயர்மேற் படர்க்கையிருதிணைவினைமயக்கம்
ஆறும்; கடுவனைவந்தான், பேடையைவந்தாள், மறிகளிர்வந்தார் எ - ம்,
தலைவனைவந்தது, தலைவியைவந்தது, மாந்தரீர்வந்தன எ - ம் முன்னிலை
இருதிணைப்பெயர்மேற் படர்க்கை இருதிணைவினை மயக்கம் ஆறும் ஆகப்
படர்க்கைவினையோடு தன்மை முன்னிலைப்பெயரும் அவற்றின்மேற்
படர்க்கைவினையும் மயங்கின இடத்திணைவழு இருபத்துநான்காம்.

     தன்மை முன்னிலைவினைகள் இருதிணைக்கும் பொதுவாகலான், அவற்றால்
திணைமயக்கவழு வாராதெனக்கொள்க.

     பாலிடத்திணைவழுவாவது:- அம்மும்மையும் மயங்கிவருவது; அது : வந்தான்
பேடையேம், வந்தாள் சேவலேம், வந்தார் கடுவனேன் எ - ம், வந்தது 5மாந்தரேம்,
வந்தது மாதரேம், வந்தன பாணனேன்எ - ம் படர்க்கை