2

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

20

பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள்
பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி
என்னு நாமத் திருந்தவத் தோனே.
     என்பது சிறப்புப்பாயிரம். இதற்குப் பொருள் மேலே சொல்லுதும்.
(பிரதிபேதம்) 1பரிதி. 2முழுதும்

பாயிரம்

பாயிரத்தின் பெயர்கள்

 

(1)

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்.
     (இதன்பொருள்.) இவை 1பாயிரத்திற்குக் காரணப் பெயர்களாம் என்றவாறு.
     (பி-ம்.) 1பாயிரத்திற்குக் காரணப்பெயராம்

(1)

பாயிரத்தின் வகை

 

(2)

பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே.
     (இ-ள்.) மேற்சொன்னபாயிரம் பொதுப்பாயிரமும் சிறப்புப்பாயிர முமென இருவகைப்படும் எ-று.
     அவற்றுள், பொதுப்பாயிரமாவது எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுவதெனவும், சிறப்புப்பாயிரமாவது ஒரு நூன்முகத்து உரைக்கப்படுவதெனவும் கொள்க.

(2)

பொதுப்பாயிரம்

 

(3)

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு 1மியைபொதுப் பாயிரம்.
     (இ-ள்.) இவ்வைந்தும் எல்லாநூன்முகத்தும் பொருந்தும் பொதுப் பாயிரமாம் எ-று.
     (பி - ம்.) 1மிவை

(3)

நூலின் இயல்பு

 

(4)

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்