20 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | என்னை? "எழுத்தெனப் படுப, அகரமுத னகர விறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே" (தொல். நூன். 1) என ஆசிரியர் தொல்காப்பியனாரும் 1 இவ்வாறு முதல்சார்பென வகுத்துக் கொண்டாரென்க. *அஃதே, அவர் சார்பெழுத்தென மூன்றே கொண்டாராலோவெனின், அஃதே, நன்று சொன்னாய்! ஒழிந்தவை எப்பாற்படு மென்றார்க்கு மூன்றாவதோர் பகுதி சொல்லலாவதின்மையானும் முதலெழுத்தாந்தன்மை அவற்றிற்கின்மையானும் சார்பிற்றோன் றுதலானும் இப்பத்தும் சார்பாகவே கொள்ளவேண்டுமென்பது. அஃதே அமைக. ஒற்றளபெடையும் ஐகாரக்குறுக்கமும் ஒளகாரக்குறுக்கமும் மகரக்குறுக்கமும் ஆய்தக்குறுக்கமும் யாண்டுப் பெற்றோமோவெனின், “வன்மையொடு ரஃகான் ழஃகா 2 னொழிந்தாங், 3 கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி,” “அளபெடை தனியிரண் டல்வழி ஐஒள, உளதா மொன்றரை தனிமையுமாகும்”, “பதினெண் மெய்யு மதுவே மவ்வோ, டாய்தமு மளபரை தேய்தலு முரித்தே” என்றார், ஆசிரியர் ‘அவிநயனாருமெனக்கொள்க.
(பி - ம்.) 1 இவ்வாறு கொண்டாரென்க 2 ஒழித்தாங்கு 3 அன்மை 4 அவினயனாரும்; அவினையினாரும் | (5) | சார்பெழுத்தின் விரி | | (60) | உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு மூன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே | | 5 | ஒளகா னொன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. | எ - ன், 1 சார்பெழுத்தின் விரித்தொகை உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) உயிரும் மெய்யுங்கூட்டி உச்சரிக்கப்படாநின்ற எழுத்து இருநூற்றொருபத்தாறும், விகாரப்படாதுநின்ற ஆய்தமெட்டும், உயிரளபெடை இருபத்தொன்றும், ஒற்றளபெடை நாற்பத்திரண்டும், குற்றியலிகரம் முப்பத்தேழும், குற்றியலுகரம் முப்பத்தாறும், ஐகாரக்குறுக்கம் மூன்றும், ஒளகாரக்குறுக்கம் ஒன்றும், மகரக்குறுக்கம் மூன்றும், ஆய்தக் குறுக்கம் இரண்டும் ஆகச் சார்பெழுத்தின் விரித்தொகை முந்நூற்றறுபத்தொன்பதாம் எ - று. |
* அப்படியா? “அஃதே யடிகளும்முளரோ” (சீவக. கனக. 328.) | |
|
|