200

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
இருதிணை யொருமைப் பன்மை வினைமேல் தன்மையிருதிணை யொருமைப் பன்மைப்
பெயர் மயங்கிய மயக்கமாறும்; வந்தான்பேடையீர், வந்தாள் சேவலீர்,
வந்தார்மஞ்ஞையை எ - ம், வந்தது 6ஊரீர், வந்ததுகிழத்தியீர், வந்தனபாணனை எ - ம்
படர்க்கையிருதிணை யொருமைப்பன்மை வினைமேல் இருதிணை முன்னிலை
யொருமைப் பன்மைப் பெயர் மயங்கிய மயக்கமாறும்; பேடையேம் வந்தான், சேவலேம்
வந்தாள், கடுவனேன் வந்தார் எ - ம், ஊரேம் வந்தது, கிழத்தியேம் வந்தது,
மல்லனேன் வந்தன எ - ம் இருதிணைத் தன்மை யொருமைப் பன்மைப் பெயர்மேல்
இருதிணைப் படர்க்கை யொருமைப் பன்மைவினை மயங்கிய மயக்கமாறும்; பேடையீர்
வந்தான், சேவலீர்வந்தாள், கடுவனைவந்தார் எ - ம், ஊரீர்வந்தது, கிழத்தியீர்வந்தது,
மல்லனைவந்தாள் எ - ம் இருதிணை முன்னிலை யொருமைப் பன்மைப் பெயர்மேற்
படர்க்கையிருதிணையொருமைப் பன்மைவினை மயங்கிய மயக்கமாறும் ஆகப்
பாலிடத்திணைவழு இருபத்துநான்கு.

     ஆகத் தனித்திணைவழுப் பன்னிரண்டும், பாற்றிணை வழுப் பன்னிரண்டும்,
இடத்திணைவழு இருபத்துநான்கும், பாலிடத்திணை வழு இருபத்து நான்கும் ஆகத்
திணைவழு எழுபத்திரண்டாம்.

     அதுமல்லன், மல்லன் அது; அதுவிறலி, விறலியது; அவையாடவர், ஆடவரவை;
அவைஅரியவர், அரிவையர்அவை என இவ்வாறு பெயரும் பெயரும் மயங்கிய
திணைவழுவுங்கொள்க.

     இனிப் பால்வழுவாது :- திணையிடமயக்கமின்றிப் பாலே மயங்குவது; அது :
உண்டான் அவள், உண்டாள் அவன், உண்டார் அவன் எ - ம், அவன் உண்டாள்,
அவள் உண்டான், அவர் உண்டான் எ - ம் வினைமேற் பெயரும் பெயர்மேல்
வினையும் வந்து, ஆண்பால் பெண்பால் ஒருமைப்பால் பன்மைப்பால் மயங்கின
உயர்திணைப் பால்வழு ஆறும்; உண்டதுஅவை, உண்டனஅது எ - ம், அவைஉண்டது,
அது உண்டன எ - ம் வினைமேற் பெயரும் பெயர்மேல்வினையும்வந்து, ஒருமை
பன்மை மயங்கிய அஃறிணைப் பால்வழு நான்கும் ஆகப் பால்வழுப் பத்து.

     அவன்முனிகள், அவள்அரிவையர், அவர்நம்பி, அவர் நங்கை, அவன் 7அரசிகள்,
அவள் சாத்தரெனப் பெயரும் பெயரும் மயங்கின பால்வழுவும் கொள்க.

     இனி இடவழு, தனியிடவழுவும் பாலிடவழுவுமென இரண்டாம் :-

     அவற்றுள், தனியிடவழுவாவது திணையும் பாலுமின்றி இடமே மயங்குவது; அது :
வந்தான்யான், 8வந்தார்யாம் எ - ம், வந்தான்நீ, வந்தார் நீயிர் எ - ம், வந்தாய் யான்,
வந்தீர்யாம் எ - ம், வந்தாய் அவன், வந்தீர் அவர் எ - ம், வந்தேன்நீ, வந்தேம்நீயிர்
எ - ம், வந்தேன்அவன், வந்தேம் அவர் எ - ம் மூவிடவினைமேலும் மூவிடப்பெயர்
மயங்கிய மயக்கம் பன்னிரண்டும்; யான்வந்தான், யாம்வந்தார் எ - ம், நீவந்தான்,
நீயிர்வந்தார் எ - ம், யான்வந்தாய், யாம்வந்தீர் எ - ம், அவன்வந்தாய், அவர்வந்தீர்
எ - ம், நீவந்தேன், நீயிர்வந்தேம் எ - ம், அவன்வந்தேன், அவர்வந்தேம் எ - ம்