மூவிடப்பெயர் மேலும் மூவிடவினை மயங்கிய மயக்கம் பன்னிரண்டும் ஆகத் தனியிடவழு இருபத்துநான்கு.
இனிப் பாலிடவழுவாவது:- திணையின்றிப் பாலும் இடமும் மயங்கி வருவது; அது : வந்தான்யாம், வந்தார்யான் எ - ம், வந்தான்நீயிர், வந்தார்நீ எ - ம், வந்தாய் யாம், வந்தீர் யான் எ - ம், வந்தாய்அவர், வந்தீர் அவன் எ - ம், வந்தேன் நீயிர், வந்தேம்நீ எ - ம், வந்தேனவர், வந்தேமவன் எ - ம் மூவிடவினைமேலும் மூவிடப்பெயரும் பாலுமான மயக்கம் பன்னிரண்டும்; யான் வந்தார், யாம்வந்தான் எ - ம், நீவந்தார், நீயிர்வந்தான் எ - ம், யாம்வந்தாய், யான்வந்தீர் எ - ம், அவர்வந்தாய், அவன்வந்தீர் எ - ம், நீயிர்வந்தேன், நீவந்தேம் எ - ம், அவர்வந்தேன், அவன்வந்தேம் எ - ம், மூவிடப்பெயர்மேலும் மூவிடவினையும்பாலுமான மயக்கம் பன்னிரண்டும் ஆகப் பாலிடவழு இருபத்துநான்கு; ஆகஇடவழு நாற்பத்தெட்டு.
அவன்யான், சாத்தன்யானென்றற்றொடக்கத்துப் பெயரொடு பெயர் மயங்கின இடவழுவும் கண்டுகொள்க.
இனிக் காலவழுவாவது:-பண்டு, அன்று, நெருநல் எ - ம், இன்று, இப்பொழுது எ - ம், நாளை, இனி, மேல், எதிர் எ - ம் வரும் இத்தொடக்கத்து இறப்பு நிகழ்பு எதிர்பென்னும் முக்காலப் பெயரோடும் முக்கால வினையும் மயங்குவது. அது : வந்தான்நாளை, வாராநின்றான்நெருநல், வாரா நின்றான்நாளை, வரும்நெருநல் எ - ம், நாளைவந்தான், நெருநல்வாராநின்றான், நாளைவாராநின்றான், நெருநல்வரும் எ - ம் வினைமேற் பெயரும் பெயர்மேல்வினையும் வந்துமயங்கின காலவழு எட்டெனக்கொள்க. அஃதேல், இன்றென்னுநிகழ்காலப் பெயருடன், இன்றுவந்தான், இன்று வருமென வழங்குதலும் வழுவாம்பிறவெனின், இன்றென்பது இற்றைநாளை யன்றே! அதனகத்து நிகழ்சமயநோக்க ஏனைக்காலங்களுமுளவாகலின், வழுவன்றென்க. பிறவுமன்ன.
இனி வினாவழுவாவது:- கறக்கின்ற எருமை பாலோ? சினையோ? எனவும், ஒருவிரல்காட்டி, இது சிறிதோ? பெரிதோ? எனவும் வரும் இத்தொடக்கத்தனவெனக்கொள்க.
இனிச் செப்புவழுவாவது :- கடம்பூர்க்குவழியாதெனின், இடம்பூணி என்னாவின்கன்றெனவும், கருவூர்க்குவழியாதென்றால், பருநூல் பன்னிரு தொடியெனவும் வரும் இத்தொடக்கத்தனவெனக் கொள்க.
இனி மரபுவழுவாவது :- வரலாற்றுமுறைமை மயங்கச்சொல்லுவது; அது: யானைமேய்ப்பானை ஆயனென்றும், பசுமேய்ப்பானைப் பாகனென்றும், எருமையிலத்தி, குதிரைச்சாணாகமென்றும் வரும் இத்தொடக்கத்தனவெனக்கொள்க.
(பி - ம்.) 1சொற்பகுத்தார் அஃதாவது 2 ராப 3 (1) மான்மாக்களீர் (2) மான்மகளீர் 4மடையரேம்வந்தன 5ஊரரேம் 6நீர், வந்தது குளத்தியீர் 7சாத்தர் 8வந்தாள்யான், வந்தார் | (24) | |
|
|