3. - பொதுவியல்

203

   
 

(376)

உயர்திணை தொடர்ந்த பொருண்முத லாறும்
அதனொடு சார்த்தி னத்திணை முடிபின.

     எ - ன், உயர்திணைவழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) உயர்திணையைச் சார்ந்துவரும்பொருளாதியாறும்,அவ்வுயர்திணையோடு
சார்த்தி முடிப்பின், உயர்திணைமுடிபினவாம்எ - று.

     எனவே, தம்வினையோடு சார்த்தின், தம் அஃறிணையானே
முடியுமென்பதூஉமாயிற்று.

     வ - று. நம்பி பொன்பெரியன்; மகஅழகியன், குழவி அழகியன், விருந்தழகியன்,
அடிமையழகியன் எ - ம், 1நாடுபெரியன், ஊர்பெரியன், இல்லம்பெரியன் எ - ம்,
வாழ்நாள் பெரியன் எ - ம், கண்பெரியன், தோள் பெரியன், மூக்குக் கூரியன்,
மார்பகலியன்எ - ம், குடிமைநல்லன், ஆண்மைநல்லன், இளமைநல்லன், மூப்புநல்லன்,
அலியல்லன், கூனல்லன், குருடல்லன் எ - ம், செலவுநல்லன், வரவுநல்லன்,
உணவுநல்லன் எ - ம் வருமிவை உயர்திணையான் முடிந்தன.

     இனித் தம்வினையான் முடியுமாறு : நம்பிக்குப் பொன்பெரிது; மகவழகிது,
குழவியழகிது, விருந்தழகிது, அடிமையழகிது எ - ம், நாடுபெரிது, ஊர்பெரிது,
இல்லம்பெரிது எ - ம், வாழ்நாள்பெரிதுஎ - ம், கண்பெரிது, தோள்பெரிது,
மூக்குக்கூரிது, மார்பகலிது எ - ம், குடிமையழகிது, ஆண்மையழகிது, இளமையழகிது,
மூப்பழகிது, அலிபோயிற்று, கூன்போயிற்று, குருடுபோயிற்று எ - ம், செலவழகிது,
வரவழகிது, உணவழகிது எ - ம் வரும். பிறவுமன்ன.

     (பி - ம்.) 1நாடுஅழகியன், ஊர்அழகியன், இல்லம் அழகியன் எ - ம்,
வாழ்நாளழகியன்.

 (26)

 

(377)

திணைபால் பொருள்பல விரவின சிறப்பினும்
மிகவினு1 மிழிபினு மொருமுடி பினவே.

     எ - ன், திணை2 பால் மரபு வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) திணையும் பாலும் பலபொருளும் தம்முள்விரவி நின்றவழிச்
சிறப்பினானும் மிகுதியினானும் இழிப்பினானும் ஒன்றனைக் கொண்டுமுடியும் எ - று.

     வ - று. “அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்கும், திங்களுஞ் சான்றோரு
மொப்பர்மற் - றிங்கண், மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து, தேய்வ
ரொருமா சுறின்” (நாலடி. 151), “பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினாற், கொண்ட
வருந்தவம் விட்டானுங் கொண்டிருந், தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர், நெல்லுண்ட
நெஞ்சிற்கோர் நோய்” (திரி. 80) எ - ம் வருமிவை சிறப்பினான் உயர்திணை
முடிபுபெற்றன.

      “வேந்தன் பெரும்பதி மண்ணாண் மாந்தர், ஈங்கிம் மூவ ரிதற்குரி யோரே”,
“தன்பான் மனையா ளயலான் றலைக்கண்டு பின்னும், இன்பா