204

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
லடிசிற் கிவர்கின்றகைப் பேடி போலா, நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர்
பார்ப்பார், என்பாரை யோம்பே னெனின்யானவ னாக வென்றான்” (சீவக. 443),
“பார்ப்பா ரறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர், மூத்தோர் குழவி யெனுமிவரைக்
கைவிட்டுத், தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று” (சிலப். 21 : 53) எனவருமிவை (பன்மை)
மிகவினால் உயர்திணை முடிபு பெற்றன.

      “நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய, வசைபட வாழ்ந்தோர் பலர் கொல்
புரையி, னற்பனுவ னால்வேதத், தருஞ்சீர்த்திப் பெருங்கணுறை, நெய்ம்மலி யாவுதி
பொங்கப் பன்மாண், வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூப நட்ட வியன்களம் பலகொல்,
யாபல கொல்லோ பெரும” (புறநா. 15), “தொல்லை நால்வகைத் தோழருந் தூமணி
நெடுந்தேர், மல்லற் றம்பியு மாமனு மதுவிரி கமழ்தார்ச், செல்வன் றாதையுஞ் செழுநக
ரொடுவள நாடும், வல்லைத் 3தொக்கன வளங்கெழு கோயிலு ளொருங்கே” (சீவக.
2360.) இவை சிறப்பினான்4 அஃறிணை முடிபு பெற்றன.

      “கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ, ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின்,
கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும், படை வேந்தன் பற்று விடல்” (திரி.
34), “எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் 5தீத்தெய்வம், உச்சந் தலையோ டிவையென்ப
யாவரும், திட்பத்தாற் றீண்டாப் பொருள்” (ஆசார. 6.) இவை6 பன்மைமிகவினான்
அஃறிணை முடிபு பெற்றன.

      “வடுக ரருவாளர் வான்கரு நாடர், சுடுகாடு பேயெருமை யென் றிவை யாறும்,
குறுகா ரறிவுடை யார்”, “மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா” எனுமிவை
இழிப்பினான் அஃறிணை முடிபுபெற்றன.

     ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ இச்செய்புக்கார்? ஒருத்தி கொல்லோ
பலர்கொல்லோ ஈண்டுப் புக்குற்றார்? எனுமிவை ஒருமை பன்மை விரவிவந்து
பன்மைமிகவினாற் பன்மைமுடிபுபெற்றன.

      “கண்டுபான் மயங்கு மையக் கிளவி, 7நின்றோர் வருவோரென்று சொன் னிகழக்,
காணா வையமும் பல்லோர் படர்க்கை” என்றார், அகத்தியனார். இச்சூத்திரத்தினால்,
ஒருவர் கொல்லோ பலர்கொல்லோ என்ற இலக்கணவழுவுக்கு அமைதிகண்டுகொள்க.

      “பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர், அஃறிணை முடிபின செய்யு
ளுள்ளே” (கிளவி. 51) என்றார், தொல்காப்பியனார்.

     இவற்றால் இவைமுடியுமாறு ஆராய்ந்துகொள்க.

     இனிப் பலபொருள்விரவின : “ஊன்றுவை, கறிசோ றுண்டு வருந்து தொழி
லல்லது, பிறிதுதொழி லறியா வாகலின்” (புறநா. 14.) இது சிறப்பினான்
ஒன்றற்கேற்றவினைகொண்டது.

     அரசன் எடுத்துவிட்டான், நாடகி ஆடவந்தான்; இவை பலவிரவிச் சிறப்பினான்
ஒருபாலால்