3. - பொதுவியல்

205

   
     எயினநாடு, மறநாடு, பார்ப்பனச்சேரி, அரசர்பெருந்தெரு, வாணிகநகர மெனுமிவை,
உயர்திணைக்கட் பலவிரவிப் பன்மையான் ஒருபெயரேற்றன.

     ஆதீண்டுகுற்றி, வயிரகடகம், மாந்தோட்டம், கமுகந்தோட்டம்
எ - ம், ஒடுவங்காடு, காரைக்காடு எ - ம் வருமிவை அஃறிணைக்கட் டலைமையும்
பன்மையும்பற்றி ஒருபெயரேற்றன. பிறவுமன்ன.

      “பாணன் பறையன் கடம்பன் றுடியன், எனுநான் கல்லது குடியு மில்லை” (புறநா.
335) என்பது உயர்திணை அஃறிணையான்முடிந்தது; இவ்வழு யாண்டு அமைக்கப்
படுமோவெனின், அது வழுவாயினன்றே அமைக்கவேண்டுவது; குடியென்பதனை
எல்லாவற்றோடுங் கூட்டியுரைக்கப்படுதலின், வழாநிலையாமென்க.

     (பி - ம்.) 1 மிழிப்பினும் 2 பால்வழுவமைப்பு 3 தொக்கது4 வியன்களம்,
தொக்கதென ஒருமை அஃறிணை 5 தீய்த்தேவர் 6 மூன்று, இவை யென்ப என்ற
பன்மைமிகுதியான் 7 நின்றோன் வருவோர்

(27)

 

(378)

உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும்
இழிப்பினும் பாறிணை யிழுக்கினு மியல்பே.

     திணைபால் வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இவ்வைந்திடத்தும் பாலும் திணையும் மயங்கிவழங்கினும் அது
முறைமையாம் எ - று.

     வ - று. “தேமல ரங்கட் டிருவே புகுதக, மாமலர்க் கோதை மணாளன் புகுதக,
காமன் புகுதக காளை புகுதக, நாம வெழில்விஞ்சை நம்பி புகுதக” (சீவக. 2121.) இஃது
உவப்பினால் ஆண்பால் பெண்பாலாய் மயங்கி வழங்கினவாறு.

     ஒருத்தியை, என்பாவை வந்தது, போயிற்று எ - ம், ஒருவனை, என்
ஆனைவந்தது, போயிற்று எ - ம், ஓராவினை, என் அன்னைவந்தாள், போயினாள்
எ - ம், ஓரெருத்தினை, என்தந்தை வந்தான், போயினான் எ - ம் வழங்குதல்
உவப்பினால் இருதிணையும் மயங்கியவாறு.

     ஒருவனையும் ஒருத்தியையும் ஒன்றனையும், அவர்வந்தார், போயினார் என்றல்
உயர்த்துச்சொல்லுதல்.

      “செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோ ரின்னுரைதான், தந்தாரேற் றந்தாரென்
னின்னுயிர்” (சீவக. 1036), “மையால் தடங்கண் மயிலன்னாய் தீத்தீண்டு, கையார்
பிரிவித்தல் காண்” (திணைமா. 5.) இவை உயர்த்துச் சொல்லுதற்கண் அஃறிணை
உயர்திணையாயின.

      “இரவின் வருவானைப் புல்லலுறு மென்மனனே தோழா” எ - ம், “மகிழ்வார்க்கு
மல்லார்க்குந் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்” (யா. கா. செய். 11, உரை:
‘விளங்குமணி’) எ - ம் வருமிவை சிறப்பின்கட் பெண்பால் ஆண்பாலாகவும்,
ஆண்பால் பெண்பாலாகவும் வழங்கின. “மன்னனுயிர்த்தே மலர்தலை யுலகம்” (புறநா.
186), “உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்,