206

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
றப்பானாற் கூற்றே மருந்து” (குறள். 950), “தம்பொருளென்பதம் மக்க ளவர்பொருள்,
தந்தம் வினையான் வரும்” (குறள். 63.) இவை சிறப்பினால் அஃறிணையாயின.

      “எனைத்துணைய ராயினு மென்னாம் தினைத்துணையும், தேரான் பிறனில் புகல்”
(குறள். 144), “அவர்நமக், கன்னையு மத்தனு மல்லரோ தோழி, புலவிய தெவனோ
வன்பிலங் கடையே” (குறுந். 93.) இவை செறலின்கட் பால்மயங்கின.

      “ஏவவுஞ் செய்கலான் றான்றேரா னவ்வுயிர், போஒ மளவுமோர் நோய்” (குறள்.
848), “இரவெதிர் கொள்ளா விருகாற் பசுவே, அரிய விரத மடங்குத லில்லார்.” இவை
இழிப்பின்கண் அஃறிணையாயின. பிறவுமன்ன.

     இவை முடியுமாறு தொல்காப்பியத்துள் அறிந்துகொள்க.

(28)

 

(379)

ஒருமையிற் பன்மையும் பன்மையி னொருமையும்
ஓரிடம் பிறவிடந் தழுவலு முளவே.

     எ - ன், பாலிட வழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஒருமைச்சொல் பன்மைதழுவலும், பன்மைச்சொல் ஒருமைதழுவலும்
ஓரிடத்துக்கு உரியசொல் பிறவிடங்கள் தழுவலும் உளவாம் எ - று.

     இப்பான்மயக்கம் முன்னுரைத்த உவப்புமுதலாயின அல்லாதவழி
வருவதெனக்கொள்க.

     வ - று. நீரிருந்தன, பாலிருந்தன எ - ம், நாடெல்லாம் வாழ்ந்தது, ஊரெல்லாம்
உவந்தது, சோறுமாண்டது, படைவந்தது, சாத்துவந்தது, கண்சிவந்தது, முலைவீங்கிற்று,
“இருநோக் கிவளுண்க ணுள்ளது” (குறள். 1091), “உள்ளிய தெல்லா முடனெய்தும்”
(குறள். 309) எ - ம் இவை அஃறிணையொருமையுடன் பன்மையும், பன்மையுடன்
ஒருமையுமயங்கின. “அகுதை தந்தை, யண்ணல் யானை யடுபோர்ச சோழர்” (அகநா.
96) “வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப.....பொலிமினென்னும் புறநிலை வாழ்த்தே” (தொல்.
செய். 110), “கலம்பெறு கண்ணுள ரொக்கற்றலைவ, .......பொழுதெதிர்ந்த, புள்ளினிர் மன்ற
வென்றாக் குறுதலின்,........பதமிகப் பெறுகுவிர்.........ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்”
(மலைபடு. 50, 65 - 6, 157, 218), யான் எம்மூர்புகுவல் எ - ம், “புலைய னெறிந்த பூசற்
றண்ணுமை, ஏவலிளையர் தாய்வயிறு கரிப்ப” எ - ம் உயர்திணையொரு மையிற்
பன்மையும், பன்மையின் ஒருமையும் மயங்கின.

     இனி இடமயக்கம் :- சாத்தன்றாய் இவை செய்வலோ, “கல்வி யென்னும் வல்லாண்
சிறாஅன், ஒல்வே னல்ல னதுவா யாகுதல்” (புறநா. 346), “ஆவெந்தை வசுமித்தா
வழாநின்ற விவனையு, மாவென்ற நோக்கியையு மாதரம் புதல்வனையும், வீய்வின்று
துணையாய்நின் விறலிழை யொடுநோக்காய், வேய்நின்ற வியன்காட்டுள் விட்டெறிந்
திறத்தியோ”,