3. - பொதுவியல்

207

   
“நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும், என்னே குறித்த நோக்கமொடு” (அகநா. 110)
எனவருமிவை தன்மை படர்க்கை தழீஇயின.

      “திண்பொரு ளெய்த லாகுந் தெவ்வரைச் செகுக்க லாகு, நண்பொடு பெண்டிர்
மக்கள் யாவையு நண்ண லாகும், ஒண்பொரு ளாவ தையா வுடன்பிறப் பாக்க லாகா,
எம்பியை யீங்குப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்” (சீவக. 1760) என்பது
முன்னிலை படர்க்கை தழீஇயிற்று.

     நீயோ அவனோ யாரிதுசெய்தார்? யானோஅவனோ யாரிதுசெய்தார்? அவனோ
நீயோ யானோ யாரிதுசெய்தாரென்ன விரவியும் ஓரிடம் தழீஇயின; பிறவுமன்ன.

(29)

 

(380)

தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்.

     எ - ன், இடம் வழுவற்கவென வழுக்காத்தலுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இந்நான்குசொல்லும் படர்க்கைக்குஆம்; தரல் வரலென்னுமிரண்டும்
தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆம் எ - று.

     வ - று. அவர்க்கு ஆடைதந்தார் (தருதல்), அவர்க்கு ஆடைவந்தது (வருதல்),
அவர்க்கு ஆடைகொடுத்தார் (கொடுத்தல்), அவர்க்கு ஆடை சென்றது (செலல்),
“புனறரு பசுங்காய் தின்றதன் றப்பற்கு” (குறுந். 292), “குப்பை நெல்லின் முத்தூறு
தந்த” (புறநா. 24), “தூண்டில் வேட்டுவன் வாங்கவா ராது” (அகநா. 36), “ஊடிய
மடந்தை போல வுறுசிலை வாங்க வாராது” (சீவக. 2185) எ - ம், எனக்குஆடை
தந்தார், எனக்குஆடை வந்தது எ - ம், நினக்கு ஆடைதந்தார், நினக்கு ஆடைவந்தது
எ - ம் முறையேகாண்க.

     எனக்கு ஆடைகொடுத்தார், எனக்கு ஆடைசென்றது; நினக்கு ஆடை
கொடுத்தார், நினக்கு ஆடைசென்றதெனவும் வருமாலோவெனின், அவை 1பராமுகமாகக்
கருதியவிடத்து வருமென்க.

     (பி - ம்.) 1பராமுகனாகக்கருதி வருமென்க.

(30)

 

(381)

இறப் 1பெதிர்வு நிகழ்வெனக் கால மூன்றே.

     எ - ன், காலவழுவமைப்பான் எடுத்துக்கொண்டார், இது காலக் கூறுபாடு
உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) போனதுவும் வருவதுவும் நிகழ்வதுவுமென்று காலம் மூன்றுவகைப்படும்
எ-று.

     இறப்பு நிகழ்வு எதிர்வென முறையிற்கூறாராயது, காலமென ஒரு
பொருளில்லையென்பாரும், நிகழ்காலமொன்றுமே என்பாரும், இறந்த தூஉம்
எதிர்வதூஉமென இரண்டென்பாரும், இறப்பு நிகழ்வு எதிர்வென மூன்றென்பாருமான
இப்பகுதியார், ஆசிரியர். அவருள், காலம் இல்லை யென்பார், ஒருபொருள்
நிகழுமிடத்துப் பொருண்மைப் பேறல்லது