தெளிவு : எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின், மழைபெய்தது, மழைபெய்யுமென்பது; எறும்பு அவ்வாறு செய்ய அதுவாதல், கேள்வியானும் காட்சியானும் பிறழ்வின்றித் தெளிந்தமையின், இவ்வாறு கூறுதல் தெளிவென்க.
இயல்பு : இக்காட்டிற்போகிற் கூறைகோட்பட்டான்; இக்காட்டிற் புக்கால், தன் கூறைகோட்படுமெனவரும். அக்காட்டினியல்பு அதுவாத லறிந்து சொன்னமையின், இவை இயல்பின் வந்தன.
இனி, யாம் பண்டுவிளையாடுவது இக்கா, யாம்பண்டு விளையாடுங்கா இது எ - ம், சாத்தன் உழுதுவருவான்போனான் எ - ம் வருமிவையும் இயல்பாம். பிறவுமன்ன. ‘மிகவு’ என்றது, உலகத்திலுள்ள பெரும்பான்மைச் சொல்லென்றறிக. | (33) | | (384) | அறிவறி யாமை யையுறல் கொளல்கொடை ஏவ றரும்வினா வாறு மிழுக்கார். | எ - ன், வினாவழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அறிவும் அறியாமையும் ஐயப்பாடும் கொளலும் கொடுத்தலும் ஏவலும் காரணமாகவரும் ஆறுவினாவிடத்தும் தப்பவழங்கார் கற்றோர் எ - று.
வ - று. அறிவினால்வரும் வினா எதிர்வாதியாலும் ஆசிரியனாலும் வரும்; எதிர்வாதி எதிரியை அளத்தற்கும் அறியாமைகாட்டுதற்கும், ‘இச் சூத்திரத்திற்குப் பொருள்யாது? இப்பதம் முடிந்தவாறென்னை?’ என வினாவும். ஆசிரியன் ஒருவனை அளத்தற்கும் கொடுத்தற்கும் அவனை விளக்குதற்கும் அவ்வாறுவினாவும். அறியாமையான்வரும் வினா தான் அறிதற்கு ‘இச்சூத்திரத்திற்குப் பொருள்யாது? நெறியாது? வஞ்சியூர்க்கு வழியாது?’ என வினாவும். ஐயத்தால் வரும்வினா உண்மையுணர்தற்கும் கோடற்கும் வரும்; மஞ்சோ புகையோ மலைமேற்பரக்கின்றது? என்பது உண்மையுணர்தற்கண் வந்தது, ‘நீரோ பேய்த்தேரோ தோன்றுகின்றது?’ என்பது கோடற்கண் வந்தது; மணியுளவோ? வயிரமுளவோ? என்பதும் கோடற்கண்வரும் வினா. சாத்தனுக்கு ஆடையில்லையோ? என்பது கொடுத்தற்கண்வரும் வினா. சாத்தா உண்டாயோ? என்பது, ஏவற்பொருட்டாய் வரும் வினா. இவ்வாறுவருவனபிறவும், “அறியான் வினாத லறிவொப்புத் தான் 1காண்டல், ஐய மறுத்த லவனறிவு தான்காண்டல், மெய்யவற்குக் காட்டலோ டைந்தும் வினாவே” என்பனவும் இவ்வாறனுள்ளே அடங்குமென்க.
இவற்றின்வழு மேலே சொல்லிப்போந்தாம்.
(பி - ம்.) 1 கோட | (34) | | (385) | சுட்டு மறைநே ரேவல் வினாதல் உற்ற துரைத்த லுறுவது கூறல் | |
|
|