வ - று. மக, குழவி, பிள்ளை, பார்ப்பு, பறழ, குருளை, மறி, கன்று, குட்டி, பொரி, 1குழ, களபமென்றற்றொடக்கத்தன இளமைப்பண்பறிசொல். இவற்றுள், மகவென்பது மக்கள், முசு, குரங்குகட்குரித்து, குழவியென்பது மக்கள், யானை, பசு, எருமை, மான், மரை, கரடி, சீயம், வருடை, பருவம், மீன், நீர், கதிர், மதிகட்குரித்து. பிள்ளையென்பது மக்கள், பூசை, தத்துவன, ஒருசார்தவழ்வன, பறப்பன, கோடுவாழ்விலங்கு, ஓரறிவுயிர்கட்குரித்து. பார்ப்பென்பது பறவைக்கும் தவழ்வனவற்றிற்கும், கோடுவாழ்விலங்கிற்கு முரித்து. பறழென்பது பன்றிக்கும், புலிக்கும், முயற்கும், நீர்நாய்க்கும், கோடுவாழ்விலங்கிற்கு முரித்து. குருளையென்பது ஆளி, புலி, பன்றி, நாய், மான், முசு, பாம்புகட்குரித்து. மறி யென்பது ஆடு, மான், குதிரை, கழுதை, கட்குரித்து. கன்றென்பது பசு, எருமை, ஆமா, மரைமா, கவரிமா, மான், ஒட்டகம், யானை, ஒருசார் ஓரறிவுயிர்கட் குரித்து. குட்டியென்பது சிங்கம், புலி, கரடி, யானை, குதிரை, ஒட்டகம், மான், ஆடு, நாய், பன்றி, முயல், நரி, குரங்கு, முசு, கீரி, நாவி, வெருகு, பாம்பு, அணில், எலி என்பனவற்றிற்குரித்து. *பொரியென்பது எருமைக்குரித்து. 2குழவென்பது ஆவிளங்கன்றுக்கும் எருமைக்கன்றிற்கு முரித்து. களபமென்பது யானைக்குரித்து.
இனி, இவற்றை இவ்வாறன்றி, மடப்பிடிமக, மான்பிணைமக; யாமைக் குழவி, நாரைக்குழவி; ஆவின்பிள்ளை, மேதிப்பிள்ளை, யானைப்பார்ப்பு, குதிரைப்பார்ப்பு; அன்னப்பறழ், ஆமான்பறழ், கொக்கின்குருளை, குரங்கின்குருளை; யானைமறி, எருமைமறி; முசுவின்கன்று, மூங்காக்கன்று; பசுவின்குட்டி, எருமைக்குட்டி என இவ்வாறு வழங்கின் மரபு வழுவாமென்க.
இனி, கை, விரல், முலை, கண், நுதல், கூந்தல், ஏடு, தோடு, இதழ், ஓலை, ஈர்க்கு, மடல், பாளை, குரும்பை, குலை, தாறு, சுளை, வீழ், நுகும்பு, இலை, அடை, 3பொகுட்டு, குரல், நெல் என்றற்றொடக்கத்தன சினையறி சொற்களாம்; இவற்றுள் கையென்பது மக்கள், யானை, புலி, கரடி, கோடு வாழ்விலங்குகட்குரித்து. விரலென்பது மக்கள், கரடி, கோடுவாழ்விலங்கு, நாய்கட்குரித்து. முலை என்பது மக்கள், ஆ, எருமை, ஆடு, நாய், பன்றிகட் குரித்து. 4கண்ணென்பது (கட்பொறி) ஓரறிவுயிர்களுள், கமுகு, கரும்பு, மூங்கில்; பீலி, தோற்கருவி, தேங்காய்கட்குரித்து. நுதலென்பது மக்கள், யானை, ஒருசார் புட்கட்குரித்து. கூந்தலென்பது பெண்டிர், பிடி, குதிரை, பனை, கமுகுகட்குரித்து. ஏடென்பது பனை, பூவிதழ்கட்குரித்து. தோடென்பது பனை, தெங்கு, தாழை, பூவிதழ்கட்குரித்து. இதழென்பது கண்ணிமை, உதடு, பூவிதழ், பனைகட்குரித்து. ஓலையென்பது பனை, தெங்கு, தாழைகட்குரித்து. ஈர்க்கென்பது தெங்கு, பனை, மா, வேம்பு, பறப்பனவற்றிற்குரித்து. மடலென்பது பனை, தெங்கு, கமுகு, வாழை, தாழை, காந்தள், ஈந்திற்குரித்து. பாளையென்பது தெங்கு, கமுகு, மூங்கில், ஈந்துகட்குரித்து. குரும்பை * பொரி, குழ, களபமென்றவற்றிற்கு ஒருபிரதியிலும் உதாரணம் கிடைத்திலது. | |
|
|