212 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | யென்பது தெங்கு, பனைகட்குரித்து. குலையென்பது தெங்கு, கமுகு, வாழை, ஈந்து, பனை, காந்தட்குரித்து. தாறென்பது கமுகு, வாழை, ஈந்துகட்குரித்து. சுளையென்பது பலா, பருத்தி, பாகற்பழங்கட்குரித்து. வீழென்பது ஆல், இறலி, தாழை, சீந்தில்கட்குரித்து. நுகும்பென்பது பனை, வாழை, மரல், புல் என்பவற்றிற்குரித்து. இலை என்பது பனை, ஈந்து, தெங்குகட்குரித்து. அடையென்பது தாமரை, ஆம்பல், நெய்தற்றொடக்கத்து நீர்நிலை ஓரறிவுயிர்கட்கும் தாம்பூலத்திற்கு முரித்து. பொகுட்டென்பது தாமரைக்கும் கோங்கிற்குமுரித்து. குரலென்பது பெண்டிர்மயிர்க்கும் 6ஐயறிவுயிரின்மிடற்றிற்கும், தினை, வரகு, பூளை, நொச்சி, பதவம், மற்றப்புற்கட்குமுரித்து. நெல்லென்பது சாலிமுதற்பைங்கூழிற்கும் மூங்கிற்கும் 7ஐவனத்திற்கு முரித்து. பிறவுமன்ன.
இனி, இவை இவ்வாறன்றி, எருமைக்கை, அரிமாவிரல், கோழிமுலை, தெங்கின்கண், குதிரைநுதல், மஞ்ஞைக்கூந்தல், தாழையேடு, வேப்பந்தோடு, ஈந்திதழ், கமுகோலை, தாழையீர்க்கு, பலாமடல், தாழைப்பாளை, மாங்குரும்பை, பலாக்குலை, மாந்தாறு, வாழைச்சுளை, அத்திவீழ், புளிய நுகும்பு, புல்லிலை, 8தாழையடை, குவளைப்பொகுட்டு, நெற்குரல், இறுக்கநெல்லெனவரின், மரபுவழுவாமென்க.
இனி, இவ்வாறே ஆண்பாற்பொருட்பெயரும் பெண்பாற்பொருட்பெயரும் ஏனைப்பாற்பொருட்பெயரும், இடப்பெயரும், காலப்பெயரும், சினைப்பெயரும், பண்புப்பெயரும், தொழிற்பெயரும், மரபுப்பெயரும் வழுவாமல், ஐம்பெருங்காப்பியம், எண்பெருத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கென்னும் இவ்விலக்கியங்களுள்ளும், விரிந்த உரிச்சொற்பனுவல்களுள்ளு முரைத்தவாறு அறிந்து வழங்குக.
(பி - ம்.) 1 குழம் 2 குழமென்பது 3 பொகுடு 4 கண்ணென்பது, கட்பொறியில்லா ஓரறிவுயிர் 5 பொகுடென்பது 6 ஐயறிவுயிர் யானைமிடற்றிற்கும் 7 புதவத்திற்கும்8 தாழையடகு, வாழைப்பொகுடு. | (37) | | (388) | வேறுவினைப் பல்பொரு டழுவிய பொதுச்சொலும் வேறவற் றெண்ணுமோர் பொதுவினை வேண்டும். | எ - ன், மரபுவழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வேறுபட்ட வினைக்குரிய பொருள் பலவற்றையும் ஒருங்கு தழுவிநிற்கும் பொதுச்சொற்களும், வேறுவினையையுடையவாய் எண்ணி வினைகொடுக்கும் பலசொற்களும் ஒன்றற்குரியவினையன்றி அவற்றிற்கெல்லாம் பொதுவான வினைகொடுத்துச் சொல்லவேண்டுவனவாம் எ - று.
வ - று. அடிசிலென்பது உண்பன தின்பன நக்குவன பருகுவன வற்றிற்கெல்லாம் பொதுவாகலான், அதனை அயின்றார், மிசைந்தார், கைதொட்டாரென்க. அணியென்பது கவிப்பன கட்டுவன இடுவன தொடுவன பூண்பனவற்றிற்கெல்லாம் பொதுவாதலால், அதனை அணிந்தார், மெய்ப்படுத்தார், தாங்கினாரென்க. 1இயமென்பது கொட்டுவன ஊதுவன | |
|
|