3. - பொதுவியல்

213

   
முதலானவற்றிற்கெல்லாம் பொதுவாகலான், அதனை இயம்பினார், படுத்தாரென்க.
படையென்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவனவற்றிற்கெல்லாம் பொதுவாதலான்,
அதனை, தொட்டார், வழங்கினார், பயிற்றினாரென்க.

     இனி, எண்ணியவழியும், குழையும் தோடும் நாணுமணிந்தார், யாழும் குழலும்
பறையுமியம்பினார் எனவரும். பிறவுமன்ன.

     சோறும் கறியும் தின்றார்; யாழும் குழலும் ஊதினாரெனின், வழுவாம்; “எண்ணுங்
காலு மதுவதன் மரபே” (கிளவி. 47) என்பது தொல்காப்பியம்.

     (பி - ம்.) 1வாச்சியமென்பது

(38)

 

(389)

வினைசார் பினமிட மேவி விளங்காப்
பலபொரு ளொருசொற் பணிப்பர் சிறப்பெடுத்தே.

     இதுவுமது.

     (இ - ள்.) வினையானும் சார்பானும் இனத்தானும் இடத்தானும் பொதுமைநீங்காப்
பலபொருளொருசொற்களை அவற்றிற்கேற்ற சிறப் பொடுங்கூட்டிச் சொல்லுவர் புலவர்
எ - று.

     வ - று. மா எ - து மாமரத்திற்கும், வண்டிற்கும், விலங்கிற்கும், திருவிற்கும்
பொதுவான பலபொருளொருசொல். அவற்றுள், மா பூத்தது, காய்த்தது என்றவழி,
மரமென்பது வினையால் விளங்கிற்று. “மாவீழ் நொச்சி மணிக்குர லூழ்த்தது” என்றவழி,
வண்டென்பது சார்பினால் விளங்கிற்று. மாவும் நாயும் வளர்ந்தனவென்றவழி,
விலங்குமாவென்பது இனத்தால் விளங்கிற்று. “மாமறுத்த மலர்மார்பின்” (புறநா. 7) என்ற
வழி, திருவென்பது இடத்தான் விளங்கிற்று.

     இனி, பலகன்றும் ஒருங்குளவழி, கன்றுவளர்ந்தது, கன்றுக்கு நீருட் டுகவென்றால்,
இன்னகன்றென்று அறியலாகாது; அவை மாங்கன்று வளர்ந்தது, மருதங்கன்று வளர்ந்தது;
ஆன்கன்றுக்கு நீருட்டுக, மான்கன்றுக்கு நீருட்டுக என்றற்றொடக்கத்தன சிறப்பான்
விளங்கின. பிறவுமன்ன.

(39)

 

(390)

எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி
இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப.

     இதுவுமது.

     (இ - ள்.) எழுத்து ஒருதன்மையவாயும் பொருள்வேறுபட்டும் வரும்
புணர்ச்சிமொழிகள் இசையை எடுத்தும் படுத்தும் வேறுபடுத்தியுச்சரித்தாற்
பொருள்வேறுபாடு விளங்குமென்று விளம்புவர் மேலோர் எ - று.

     வ - று. செம்பொன்பதின்றொடி, குறும்பரம்பு, ஆற்றுக்கரை, செம்பருத்தி,
நாகன்றேவன்போத்து, 1 தாமரைக்கண்ணியார், குன்றேறாமா என்பவை. இவற்றை
வேறுபட உச்சரித்துக் கண்டுகொள்க. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1 (1) தாமரைக்கண்ணியார், (2) தாமாக்கண்ணியார் (40)