| 216 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | 1 “ஏஏ அம்பன் மொழிந்தனள் யாயே”; 2 “நல்குமே நல்குமே நல்குமே நாமகள்”; “பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ.” இவை இசைநிறை. பிறவுமன்ன.
“அசைநிலை யிரண்டினும் பொருண்மொழி மூன்றினும், இசைநிறை நான்கினு மொருமொழி தொடரும்” என்றார். அகத்தியனார்.
(பி - ம்.) 1 (1) ஏயேயம்பல் (2) ஏஏ ஏஎ யம்பல் 2 நல்குமோ........ நல்குமோ | (44) | | | (395) | இரட்டைக் கிளவி 1யிரட்டிற் பிரிந்திசையா. | எ - ன், மரபுவழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) 2இரட்டித்து நிற்குஞ்சொற்கள் அவ்விரட்டிப்பிற் பிரிக்கப் பெறா எ - று.
வ - று. செழுசெழுத்தார், மொடுமொடுத்தார் எ - ம், “கொறு கொறுத்தா ரென்றொருவர் கூறுங்கா லுள்ளம், துடிதுடித்துத் 3துள்ளி விடும்”, “சலசல மும்மதஞ் சொரியத் தத்தமுட், கொலைமருப் பிரட்டைகள் குளிப்ப” (சீவக. 82), “கலகல, கூஉந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம், போஒந் துணையறிவா ரில்” (நாலடி. 140), “வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும், பச்சோலைக் கில்லை யொலி” (நாலடி. 256), “குறுகுறு நடந்து சிறுகை நீட்டி, இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்” (புறநா. 188) எ - ம் வரும். இரட்டைக்கிளவியென்றமையான், இவை இரண்டின் இறவாவெனக்கொள்க; இறந்துநின்று ஒருசொற்பொருள்படின், இவை யாகாவென்க.
(பி - ம்.) 1 யிரட்டுப் 2 இரட்டையாக நிற்குஞ் சொற்கள்3 துள்ளிவரும் | (45) | | | (396) | ஒருபொருட் பலபெயர் பிரிவில 1வரையா. | இதுவுமது.
(இ - ள்.) ஒருபொருள் கருதிவரும் பலபெயர் பொருளின்நீங்கா வாயின், ஒருபொருட்குப் பலபெயர் வந்தனவென்று கடியப்படா எ- று.
‘பிரிவில வரையா’ எனவே, பிரிவினகடியப்படுமெனக்கொள்க.
வ - று. “வையைக் கிழவன் வயங்குதார் மாணகலம், தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற், கூடலார் கோவொடு நீயும் படுதியே, நாடறியக் கவ்வை யொருங்கு.” இது பிரிவின்றி இருபெயர் வந்தது. “கொய் தளிர்த் தண்படலைக் கூத்தப் பெருஞ்சேந்தன், வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுவல், காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெம், சாலேகஞ் சார நட.” இது, காலேகவண்ணம்
இவனுக்கே உரிமைத்தன்மையிற் பிரிக்கப்படுதலின், ஆகாதென்க. பிறவுமன்ன. வடமொழிக்கு இரண்டல்லாத வெல்லாம் பலவென்றும் தமிழுக்கு ஒன்றல்லாதவெல்லாம் பலவென்றும் அறிக.
(பி - ம்.) 1 வரையார் | (46) | |
|
|