3. - பொதுவியல்

217

   
 

(397)

ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா.

     எ - ன், மரபுவழுவமைப்பு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பொருள்வேறின்றி ஒருபொருளைக்குறித்து வரும் பலசொற்கள்
அப்பொருளைச் சிறப்பித்தலின், வழுவென்றுநீக்கப்படா எ - று.

     வ - று. அவன்றான், அதுதான் எ - ம், “மீமிசைஞாயிறு கடற்பாய்ந் தாங்கு”,
“விலங்ககன்ற வியன்மார்ப” (புறநா. 3), “ஆடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு”
(பொருந. 61), “உயர்ந்தோங்கு பெருவரை யூறின்றேறலின்” (மலைபடு. 41),
“மழவிளமரையான் பாறேனளாய் மாந்துகென்பார்”, “குழிந்தாழ்ந்த கண்ணவாய்த்
தோன்றி” (நாலடி. 49), “கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை” (புறநா. கடவுள்),
“உண்ணலுமுண்ணேன் வாழலும்வாழேன்” (கலி. 23), “நனிபெரிதும், வேற்கண்ண
ளென்றிவளை வெஃகன்மின்” (நாலடி. 17) எ - ம் வரும்.

     அஃதேல், “பூமலர்” “பூம்போது”, (புறநா. 25), “களிற்றொருத்தல்” (கலி. 2),
“கேழற்பன்றி” (புறநா. 152) என்றற்றொடக்கத்தனவோவெனின், அவை : பூவென்பது
பொலிவினையுணர்த்தலானும், களிறென்பது எருமையினொருத்தல் முதலாயினவற்றை
நீக்குதலானும், கேழலென்பது எய்ப்பன்றி முதலானவற்றை நீக்குதலானும்
பொருள்வேறுபாடுடைமையின், ஒரு பொருட் பன்மொழி யாகா; பண்புத்தொகையுள்
அடங்குமென்க.

(47)

 

(398)

இனைத்தென் றறிபொரு ளுலகி னிலாப்பொருள்
வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்.

     எ - ன், மரபுவழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) இத்துணைத்தென்று வரையறுத்து உணர்த்தப்படும் பொருளாதி
எப்பொருள்களும் உலகின்கண் இல்லாதபொருள்களும் வினையொடு
கூட்டிச்சொல்லுங்காலை உம்மைகொடுத்துச் சொல்லுக எ - று.

     வ - று. தமிழ்நாட்டு மூவேந்தரும்வந்தார், தேவர்முப்பத்து மூவரும் வந்தார்,
நமர்நால்வரும்வந்தார், உலகமூன்றும் ஒருங்குணர்ந்தான், காலமூன்றும் கண்டான்,
கண்ணிரண்டும் சிவந்தான், குணமூன்றும்கூறினான், தொழிலாறும்தோற்றினான் எ - ம்,
பவளக்கோட்டு நீலயானை பண்டுமில்லை, முயற்கோடும் ஆமைமயிரும் அம்மிப்பித்தும்,
துன்னூசிக்குடரும் ஈங்குமில்லை, என் 1 அகங்கைக்கும் மயிரில்லை, இக்கழுதைக்கும்
கோடில்லை (நேமி. சொல். சூ. 11, உரை) எ - ம் வரும். “கடுவன் முதுமகன் கல்லா
2மூலற்கு, வதுமை வந்த வன்பறழ்க்குமரி, இருதோடோழர்”, “எருமை நாற்கால் நீர்க்கீ
ழவ்வே”, 3 “கண்களியாச் சென்றமர்ப்பக் கைநாஞ்சின் மேலசைஇ, ஒண்குழை
யொன்றொல்கி யெருத்தலைப்ப” என்றற் றொடக்கத்தன செய்யுள் விகாரத்தால் வந்த
உம்மை தொக்கனவெனக் கொள்க.

     இனி, தமிழ்நாட்டு மூவேந்தர்வந்தார், பவழக்கோட்டு நீலயானை
பண்டில்லையெனின், 4வேறும் அரசருளரெனவும், இன்று இவ்வியானை உண்டெனவும்
வரும்.