218

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
     ‘வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்’ எனவே, வினைப்படாத விடத்து
உம்மைவேண்டுவனவும், வேண்டாதனவும் உளவெனக்கொள்க.

     இவையிரண்டும் சே, இவைஇரண்டும் பசு எ - ம், வீடொன்று, அறமிரண்டு,
குற்றமூன்று, பொருள்நான்கு, பொறியைந்து எ - ம் வரும். பிறவுமன்ன.

     (பி - ம்.) 1அங்கைக்கும் 2மூவற்குவதுவையமைந்த 3கண்களியாற் 4வேறரசர்

(48)

 

(399)

செயப்படு பொருளைச் செய்தது போலத்
தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ளுரித்தே.

     இதுவுமது.

     (இ - ள்.) தற்செய்கையின்றிப் பிறராற் செய்யப்படும் பொருளைத்
தன்செய்கைத்துப்போலத் தொழிற்படக்கிளத்தலும் வழக்கடிப்பாட்டிற்கு உரித்து எ - று.

     எனவே, இலக்கணமன்றேனும் கருமத்தையும் கருவியையும்
கருத்தாவாகச்சொல்லினும் 1அமைகவென்பதாயிற்று.

     வ - று. இல்லம் மெழுகிற்று, சோறுஅடாநின்றது, பொன் வரும் எ - ம், சுரிகை குத்தும், எழுத்தாணி எழுதாநின்றது, வாள் எறியும்
எ - ம் காண்க.

     (பி - ம்.) 1 வழுவமைதியின் அமைக்க.

(49)

 

(400)

பொருண்முத லாறா மடைசேர் மொழியினம்
உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும்.

     எ - ன், மரபியலுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) பொருளாதியாறனையும் அடையாக அடுத்துவருமொழிகள்
இனத்தைக்காட்டுவனவும் காட்டாதனவுமாம்; வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் எ - று.

     வ - று. 1நெய்க்குடம், குளநெல், கார்த்திகைவிளக்கு, பூந்தோடு, செந்தாமரை,
குறுங்கூலி எ - ம், உப்பளம், ஊர்மன்று, கீழ்நோக்கிய கிணறு, மேல்நோக்கியமரம்
(சிலாசாஸனத் தொடர்மொழிகள்), சிறுகாலை, 2கான்மாடு, செம்போத்து, தோய்தயிர்
எ - ம் வழக்கிடத்து இனமுள்ளனவும் இல்லனவும் வந்தவாறு.

      “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்” (குறள். 913), “கானியாற் றடைகரை
யூரினிது” (இனியது. 5), “முந்நாட் பிறையின் முனியாது வளர்ந்தது”, “கலவ மாமயி
லெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா” (சீவக. 1558), “சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி
யாங்கிவள்” (குறுந். 18), “ஆடுபாம் பெனப்புடை யகன்ற வல்குன்மேல்” (சீவக. 1007)
எ - ம், “பொற்கோட் டிமயமும் பொதியிலும் போன்றே” (புறநா. 2), “தென்குமரி
வடபெருங்கல்” (புறநா. 17), “வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன” (புறநா. 321),
“சிறகா வண்டு செவ்வழி பாட மாடத் தூடெலாம், இறை கொள் வானின் மீனென
வரம்பை முலையி