னிருந்தவே” (சீவக. 74), “செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்” (புறநா. 38), “முன்னைத் தஞ்சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக” (தொல். செய். 64, உரை) எ - ம் செய்யுளில் இனமுள்ளனவும் இல்லனவும் வந்தவாறு.
“இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை, வழக்கா றல்ல செய்யு ளாறே” (தொல். கிளவி. 18) என்பதனால் இவை முடியுமாறு அறிந்து கொள்க.
(பி - ம்.) 1நொய்க்குடம் 2காலிமாடு | (50) | | | (401) | அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின். | எ - ன், மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.
(இ - ள்.) அடையடுத்தமொழி அதற்கு இனமல்லதனையும் காட்டும், அவ்விடத்திற்குப் பொருத்தமுடைத்தாயின் எ - று.
வ - று. சுமந்தான் விழுந்தான், புதுப்புனல் வந்தது, இருள் புலர்ந்தது என்பன சுமக்கப்பட்டது வீழ்ந்தது, மழைபெய்தது, சுடர்தோன்றிற்றென்பனவற்றை முறையே விளக்கினவாறுகாண்க. பிறவுமன்ன.
மேலைச்சேரிக்கோழி 1அலைத்ததென்றாற் கீழைச்சேரிக்கோழி அலைப்புண்டதென்பதும், “ஆவாழ்கவந்தணர்வாழ்க” என்றாற் பிறர் கெடுகவென்னாமையும் மேலிற் சூத்திரத்தானேமுடிதலின், இன்ன இதற்குப் பொருளாகாவென்றற்கு ‘ஆண்டுறின்’ என்றாரென்க.
“விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்” என்றார், பரிமாணனார்.
(பி - ம்.) 1அழைத்ததென்றாற் கீழைச்சேரிக்கோழி யழைப்புண்டது. | (51) | | | (402) | அடைசினை முதன்முறை யடைதலு மீரடை முதலோ டாதலும் வழக்கிய லீரடை சினையொடு செறிதலு மயங்கலுஞ் செய்யுட்கே. | எ - ன், மரபுவழுவற்கவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) ஒன்றைச் சொல்லுங்கால், அடை சினை முதலெனக் கிடந்த முறையே சொல்லுதலும், இரண்டு அடையை முதலுடனே சேர்த்துச் சொல்லுதலும் வழக்கினுள் இயல்பாம்; இரண்டடையைச் சினையொடு சேர்த்துச்சொல்லுதலும் வேண்டியவாறு மயங்கச்சொல்லுதலும் செய்யுட் கண் இயல்பாம் எ - று.
வ - று. பெருந்தலைச்சாத்தன், 1செங்கால்நாரை, நெட்டிலைத் தெங்கு எ - ம், இளம்பெருங்கூத்தன், சிறுகருங்காங்கை (ஐங்குறு. 391) எ - ம் வழக்கினுள் வந்தவாறு. “சிறுபைந் தூவியிற் செயிரறச் செய்த”, “கருநெடுங் கண்டருங் காம நோயே” எ - ம், “பெருந்தோட் சிறுமருங்குற் பேரமர்க்கட் பேதை” எ - ம் செய்யுளுள் மயங்கிவந்தன. பிறவுமன்ன.
(பி - ம்.) 1செங்கணாரை | (52) | |
|
|