(பி - ம்.) 1 கொண்டார்இச்சூத்திரம் 2 சொன்னவாறோ 3 செய்யு ளிடத்தன்றியும் வழக்கிடத்தும் யாண்டும் 4 குற்றுகரம், குற்றிகரம் |
| (7) |
2. எழுத்தின்பெயர் |
| | (62) | அம்முத லீரா றாவி கம்முதல் மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். |
எ - ன், ஒருசார் பொதுப்பெயராமாறுணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) அகரமுதலாகநின்ற பன்னிரண்டினையும் உயிரென்றும், ககரமுதலாகநின்ற பதினெட்டினையும் உடம்பென்றும் பெயரிட்டுவழங்கி னார்கள், 1 முற்காலத்துக் கற்றுவல்லோர் எ - று.
‘விளம்பினர் புலவர்’ என்ற விதப்பினோனேயும், பாயிரத்திற் பெறுவதேயன்றி நூலுள்ளும் இஃது *எதிர்நூலல்லவென்பது பெற்றாமெனக் கொள்க.
(பி - ம்.) 1 மேற்காலத்து |
குறில் |
| | (63) | அவற்றுள், அஇ உஎ ஒக்குறி லைந்தே. |
இதுவுமது.
(இ - ள்.) ஆவியென்றும் மெய்யென்றும் மேற்கூறப்பட்டனவற்றுள், அ இ உ எ ஒ 1 என்னுமைந்தும் குற்றெழுத்தென்னும் குறியவாம் எ - று.
அஇஉஎஒ என இவற்றை உச்சரித்து அன்னவாதல் கண்டுகொள்க. ‘அவற்றுள்’ 2 என்பதனைப் பெயரதிகாரமுற்றுமளவும் வருவித்துக்கொள்க.
(பி - ம்.) 1 என்று சொல்லப்படும் ஐந்தெழுத்தும் 2 என்பதனை இவ்வதிகாரமுற்றும் |
(9) |
நெடில் |
| | (64) | ஆஈ ஊஏ ஐஓ ஒளநெடில். |
இதுவுமது.
(இ - ள்.) இச்சொல்லப்பட்ட ஏழும் நெட்டெழுத்தென்னும் பெயரவாம் எ - று.
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என உச்சரித்து அன்னவாதல் கண்டு கொள்க. |
(10) |
* “எதிர்நூலென்பதும் ஒன்றுண்டு. அது யாதோவெனின், முதனூலின் முடிந்தபொருளை ஓராசிரியன் யாதானும் ஒரு காரணத்தாற் பிறழவைத்தால் அதனைக் கருவியால் திரிவுகாட்டி ஒருவாமைவைத்தற்கு ஒள்ளியான் ஒரு புலவனால் உரைக்கப்படுவது; என்னை? ‘தன்கோ ணிறீஇப் பிறன் கோண் மறுப்ப, தெதிர்நூ லென்ப ரொருசா ரோரே’ (இறை. க, சூ - உரை; யாப்பருங்கலவிருத்தி.) |