| 220 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | | | (403) | இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். | இதுவுமது.
(இ - ள்.) உலகத்துப் பொருள்களெல்லாம் இயற்கைப்பொருளும் செயற்கைப்பொருளுமென இருவகையவாம். அவற்றுள், இயல்பாகவாரா நின்றபொருளைச் சொல்லுமிடத்து இத்தன்மையதென்று சொல்லல்வேண்டும் எ - று.
இவ்வாற்றானும் சொல்லும் பொருளும் வரையறுத்தாராப.
வ - று. நிலம்வலிது, நீர்தண்ணிது, தீவெய்யது, வளி உளரும், உயிருணருமெனவரும். | (53) | | | (404) | காரண முதலா வாக்கம் பெற்றும் காரண மின்றி யாக்கம் பெற்றும் ஆக்க மின்றிக் காரண மடுத்தும் இருமையு மின்றியு மியலுஞ் செயும்பொருள். | இதுவுமது.
(இ - ள்.) காரணச்சொல்லை முன்கொண்டு ஆக்கச்சொல்லொடு வருவனவும், காரணச்சொல்லின்றி ஆக்கச்சொல்லொடுவருவனவும் ஆக்கச் சொல்லின்றிக் காரணச்சொல்லொடு வருவனவும் ஆக்கமும் காரணமுமின்றி வருவனவுமென்னும் இந்நான்மையின் நடக்கும், செயற்கையையுடைய பொருள்கள் எ - று.
வ - று. கடுவும் கைபிழியெண்ணெயும் பெற்றமையால் மயிர் நல்லவாயின, எருப்பெய்து இளங்களைகட்டு நீர் காலியாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின எ - ம், மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எ - ம், கடுவும் கைபிழியெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல, எருப்பெய்து இளங்களைகட்டு நீர்காலியாத்தமையாற் பைங்கூழ் நல்ல எ - ம், மயிர்நல்ல, பைங்கூழ்நல்ல எ - ம் முறையே நான்மையும் வந்தவாறு காண்க.
“பல்லார்தோ டோய்ந்து வருதலாற் 1பாய்புன, னல்வய லூரநின் றார்புலால் - புல்லெருக்க, மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற், காதற்றாய் நாறு மெமக்கு” (தொல். கிளவி. 56, ந.) என்றற்றொடக்கத்தனவும் அதன்பாற்படுத்தறிக. இது, பரத்தையிற் பிரிந்துவந்த கிழவனோடு புலந்துரைக்கின்றாளாதலின், 1தார் புலால்நாறுதற்குக்காரணம் பரத்தையரொடு கூடலென்பதூஉம், எருக்கங்கண்ணி நறிதாதற்குக் காரணம் தலைவன்செய்த தீங்கு தன் புதல்வன் இனியமுகத்தால் தணிக்குமன்பென்பதூஉம் பெறப்படுகின்றன. ‘தார்’ என்ற சொல் ஆக்கமின்றிக் காரணமடுத்தது.
(பி - ம்.) 1 பூம்பொய்கை 2 குவளைபுலால் | (54) | | | (405) | தம்பா லில்ல தில்லெனி 1னினனா யுள்ளது கூறி மாற்றியு முள்ளது சுட்டியு முரைப்பர் சொற்சுருங்கு தற்கே. | |
|
|