3. - பொதுவியல்

221

   
     இதுவுமது.

     (இ - ள்.) ஒருவன் ஒன்றை வினாவினால் அது தம்பக்கலில்லையென்று
உரைக்கவேண்டின், அவன் வினாயதற்கு இனமாய்த் தன் பக்கலுள்ள தனைச்சொல்லி
வினாயதனை இல்லையென்றும், உளதாயின் அதனை இத்துணையுண்டென்று சுட்டியும்
சொல்லுவர் தொல்லோர், உரை 2பல்காமற்கு எ - று.

     வ - று. பயறுளவோ வணிகீரேயென்றாற்கு உழுந்தல்லதில்லை;
இத்துணைப்பயறுளவென்க. நூறுவிற்கும் பட்டாடையுளவோ என்றாற்கு ஐம்பதுவிற்கும்
கோசிகமல்லதில்லை; இத்துணைப்பட்டாடையுளவென்க. பிறவுமன்ன.

     (பி - ம்.) 1இனனாவுள்ளது 2பல்காமைக்கு

(55)

 

(406)

ஈதா கொடுவெனு மூன்று முறையே
இழிந்தோ னொப்போன் மிக்கோ னிரப்புரை.

     இதுவுமது.

     (இ - ள்.) ஈயென்னுஞ்சொல் ஈவானின் இழிந்த இரப்போன் சொல்லுவதாம்;
தாவென்னுஞ்சொல் ஈவானொடு ஒக்கும் இரப்போன் சொல்லுவதாம்;
கொடுவென்னுஞ்சொல் ஈவானின் மிக்க இரப்போன் சொல்லுவதாம் எ - று

(56)

 

(407)

முன்னத்தி னுணருங் கிளவியு முளவே.

     இதுவுமது.

     (இ - ள்.) சொற்கிடந்தவாறன்றிச் சொல்லுவான் குறிப்பினானே வேறுபொருள்பட
வருஞ்சொற்களும் சிலவுளவாம் எ - று.

     வ - று. “செஞ்செவியர் வெள்ளொக்கலர்” என்றவழி, செவ்வென்று
உதிரஞ்சொரியுஞ்செவியர், வெள்ளிய சுற்றத்தாரென்பதன்று; செவியெல்லாம் சாலச்
செம்பொனணிந்தார், முட்டில் செல்வத்துக் கிளையினையுடையா ரென்றவாறு;
‘வெள்ளொக்கலர்’ என்பது மாசற்ற சுற்றத்தினையுடையரென்றுமாம். “குழைகொண்டு
கோழியெறியும் வாழ்க்கையவர்” என்றவழி, கோழியெறிவா ரென்றுணரற்பாலதன்று;
ஒன்றானும் முட்டில் செல்வத்தாரென்றவாறு. பிறவுமன்ன.

(57)

 

(408)

கேட்குந போலவுங் கிளக்குந போலவும்
இயக்குந போலவு மியற்றுந போலவும்
அஃறிணை மருங்கினு மறையப் படுமே.

     இதுவுமது.

     (இ - ள்.) இத்தொழில்களில்லனவும் உள்ளனபோல அஃறிணையிடத்தும்
சொல்லப்பெறும் எ - று.

     வ - று. “நன்னீரை வாழி யனிச்சமே நின்னினு, மென்னீரள் யாம்வீழ் பவள்”
(குறள். 1111), “கரவலமென் றோரைக் கண்ட திலையோ. இரவெலா நின்றாயா
லீர்ங்கதிர்த் திங்காள்”