| 222 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | | [ “அரவளைமென்றோள்” - தொல். கள. 42, ந] எ - ம், “பகையு முவகையுங் கண்ணுரைக்கும்” (பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும்; குறள். 709), “மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும், தேய்தலு முடைமையைத் திங்கள் செப்புமால்” (சீவக. 2932), நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது எ - ம், இந்நெறி இன்னவூர்க்குச்செல்லும், இம்மலை இன்னுழிவந்துகிடக்கும், கடல் இத்துணை ஆழ்ந்துகிடக்கும், நிலம் இத்துணை அகன்றுகிடக்கும்எ - ம், “தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின், தன்னெஞ்சே தன்னைச் சுடும்” (குறள். 293), “வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன மடமை கூரத், தண்கய நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக், கண்டனங் கள்வ மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப், பண்டைய மல்லம் வேண்டா படுக்கவென் றூடிற் றன்றே” (சீவக. 1623), “கருவிரற் செம்ழுக வெண்பற்சூன் மந்தி, பருவிரலாற் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரை மேற், 1றேன்றேவர்க் கோக்கு மலைநாட வாரலோ, வான்றேவர் கொட்கும் வழி” (திணைமா. 10) எ - ம் முறையே காண்க. பிறவுமன்ன.
(பி - ம்.) 1றேன்றேவர்க் கீயும் | | | (409) | உருவக வுவமையிற் றிணைசினை முதல்கள் 1பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே. | எ - ன், மரபுவழுவமைப்பும் இவ்வோத்திற்குப் புறநடையும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) உருவகமும் உவமையுமென்னும் இவ்வலங்காரகட்கு ஏற்புழி இருதிணையும் தம்முள் மயங்கலும் சினையுமுதலும் தம்முள் மயங்கலும், இவ்வோத்தினுட் சொல்லாதொழிந்தனவும் போற்றி யறிந்துகொள்க எ - று.
வ - று. “தருமன் றண்ணளி யாற்றன தீகையால், வருணன் கூற் றுயிர் மாற்றலின் வாமனே, அருமை யாலழ கிற்கணை யைந்துடைத், திருமகன்றிரு மாநில மன்னனே” (சீவக. 160.) இஃது உயர்திணையும் முதலும் மயங்காது வந்த உருவகம். “முகந்தா மரைமுறுவன் முல்லைகண் ணீலம், இகந்தார் விரல்காந்த. ளென்றென் - றுகந்தியைந்த, மாழைமா வண்டிற்கா நீழல் வருந்தாதே, ஏழைதா னேகு மினிது” (திணைமா. 72) இஃது அஃறிணையும் சினையும் மயங்காது வந்த உருவகம். “மதிபவள முத்த முகம்வாய் முறுவல்.” இது திணைமயங்காது முதலும் சினையும் மயங்கி வந்த உருவகம். “மன்னர் மடங்கன் மறையவர் சொன்மாலை, அன்ன நடையினார்க் காரமுதம் - துன்னும், பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப்பூம் பைந்தார், எரிசினவேற் றானையெங்கோ” (பு. வெ. 9 : 1), “தாழிருந் தடக்கையு மருப்புந் தம்பியர், தோழர்தன் றாள்களாச் சொரியு மும்மதம், ஆழ்கடற் சுற்றமா வழன்று சீவக, ஏழுயர் போதக மினத்தொ டேற்றதே” (சீவக. 775.) இவை உயர்திணை அஃறிணையாக மயங்கி வந்த உருவகம். “பட்டவர்த் தப்பலிற் பரவையேந் தல்குல், அட்டொளி யரத்தவாய்க் கணிகை யல்லது, மட்டுடை மணமகண் | |
|
|