மலர்ந்த போதினாற், கட்டுடைக் காவலிற் காமர் கன்னியே” (சீவக. 99), “அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி, புகழ்தகு மேகலை நாஞ்சில் பூண்முலை, திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகம், சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே” (சீவக. 1444.) இவை அஃறிணை உயர்திணையாக மயங்கி வந்த உருவகம். பிறவுமன்ன.
“கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள், மங்கலங் கூற மலிபெய்திக் - கங்கையாள், பூம்புன லாகங் கெழீஇயினான் போரடுதோள், வேம்பார் தெரியலெம் வேந்து” (பு. வெ. 9 : 36), “இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி, னிலமென்னு நல்லா ணகும்” (குறள். 1040), “வருந்தி யீன்றாண் மறந்தொழிந்தாள் வளர்த்தாள் சொற்கேட்டில்கடிந்தாள், முருந்தின் காறுங் கூழையை முனிவார் நின்னை யென்முனிவார், பொருந்திற் றன்றா லிதுவென்னாய் பொன்று மளித்திவ் வுயிரென்னாய், திருந்து சோலைக் கருங்குயிலே சிலம்ப விருந்து கூவுதியால்” (சீவக. 1661) என்றற்றொடக்கத்தன உருவக விலக்கணம் விளங்க நின்றிலவேனும் அதனிடத்து மயங்கி நின்றனவெனக் கொள்க.
“மணியணி வரைநிகர் மாட வாயிலோன்” எ - ம், “திருமக ளிவ ளெனச் செல்வி செல்லுமே”, “இந்திர குமரன் போல விறைமக னிருந்து காண” (சீவக. 1253) எ - ம் வருமிவை திணையும் முதலும் மயங்காதுவந்த உவமை. “செம்பவழ மேய்ப்பத் திகழ்ந்திலங்கு சீறடியின், வம்பழகு நோக்கி வழிபடுவ தேசாலும்” (சூளா. கல். 293), “மதிநுதன் மாதர் மதலை பின் சென்றாள்”, “கயற்கண் ணாளையுங் காமனன் னானையும்” (சீவக. 1346) எனவருமிவை திணைமயங்காது முதலும் சினையும் மயங்கின உவமை. “மல்லன் மலையனைய மாதவரை வைதுரைக்கும்” (சீவக. 2789), “ஆளியமொய்ம்பர்க் களித்தணி சண்பக, நாள்செய் மாலை நகைமுடிப் பெய்பவே” (சீவக. 132) எ - ம், “தேர்ந்தநூற், கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த் தவே” (சீவக. 53), “ஏலங் கமழ்குழ லேழை யவரன்ன, வாலைக் கரும்பி னகநா டணைந்தான்” (சீவக. 1613) எ - ம் வருமிவை திணை மயங்கி வந்த உவமை.
இவை பட்டாங்குரைத்தலின், உவப்பினுள் அடங்காவெனக் கொள்க.
‘பிறவும்’ என்றதனால்; * “அடிவண்ண மல்லா லலங்குதார்க் கோதை, முடிவண்ணங் கண்டறியா வேந்து”, “நெஞ்சுநடுங் கவலம் பாயத், துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே” (புறநா. 3.) இவை, வேத்தியல் அரசியலென்னும் தன்மையையுணர்த்தற்பாலன அத்தன்மையையுடைய மக்களையுணர்த்தி உயர்திணையாய் ஈண்டு அஃறிணையான் முடிதலின், வழுவாயின. இவ்வாறு வருவனவும் பிறவும் அமைத்துக்கொள்க.
(பி - ம்.) 1பிறழ்வும் | (59) | * இக்கருத்து ‘எருத்து மேனோக்குறின்’ (தொல். மெய். சூ. 8, மேற்.) என்பதிலும் அமைந்துள்ளது. | |
|
|