224

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(410)

யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை 1விற்பூண்
தாப்பிசை யளைமறி பாப்புக் கொண்டுகூட்
டறிமறி மாற்றெனப் பொருள்கோ ளெட்டே.

     எ - ன், பொருள்கோட்பகுதி யுணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) யாற்றுநீர்ப்பொருள்கோள் முதலாக எட்டாம் பொருள்
கொள்ளுமுறைமை எ - று.

     இவற்றை, “நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற், றவைநான் கென்ப
மொழிபுணரியல்பே” (தொல். எச்ச. 8) என நான்காகவும், * “பூட்டுவில் விதலை யாப்புக்
கொண்டுகூட், டொருசிறை நிலையே பாசி 2நீக்கமென், றாக்கிய வைந்தும்
பொருள்கோளாகும்” என ஐந்தாகவும், இவ்வெட்டுடனே அடிமொழிமாற்றென்ப
தொன்றுகூட்டி(ஒன்பதாகவும் உரைப்பாருமுளர். அவையும் இவற்றுள்ளே
அடங்குமெனக்கொள்க.இம்முறைவைத்த காரணமும் காண்க.

     (பி - ம்.) 1விற்பூட்டு 2நீக்குமென் றாக்கிய வைந்துமப்

 (60)

 

(411)

மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள்
அற்றற் றொழுகுமஃ தியாற்றுப் புனலே.

     எ - ன், யாற்றுநீர்ப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) ஏனைஅடிகளைநோக்காது அடிதோறும் பொருள் அற்றுவருவது
யாற்றுநீர்ப் பொருள்கோளாம் எ - று.

     வ - று. “அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம், விலைப்பாலிற் கொண்டூன்
மிசைவதூஉங் குற்றம், சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம், கொலைப்பாலுங்
குற்றமே யாம்” (நான்மணி. 26) என வரும்.

(61)

 

(412)

ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே.

     எ - ன், மொழிமாற்றுப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

     (இ - ள்.) கருதியபொருளுக்குப் பொருந்தியமொழிகளை ஓரடியுள்ளே
மாற்றிச்சொல்லுவது மொழிமாற்றாம் எ - று.

     வ - று. “சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய, யானைக்கு நீத்து முயற்கு
நிலையென்ப, கானக நாடன் சுனை” எனவருமிதனுள், சுரைமிதப்ப, அம்மி ஆழ
எனவும், யானைக்குநிலை முயற்குநீத்தெனவும் ஓரடியுள்ளே மாற்றினவாறுகாண்க;
இதனைச் சுண்ணமொழி மாற்றென்று ஈரடியிடத்தேகொள்ளின்,
     * இந்த ஐந்து பொருள்கோளையும் இவற்றின் உதாரணங்களையும்
இறையனாரகப்பொருள், 59 - ஆம் சூத்திரவுரையிற் காண்க. ( பொருள்கோள்
ஒன்பதென்பவர் நேமிநாதமுடையார்; எச். சூ. க; யாப்பருங்கலவிருத்தி முதலியவற்றிலும்
பரக்கக்காணலாம்.