ஏனையடிகளுள்ளும் ஏனைப் பாக்களுள்ளும் வரப்பெறாதாமெனமறுக்க.
(பி - ம்.) 1கரையாட | (62) | | (413) | பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினும் நேரும் பொருள்கோ 1ணிரனிறை நெறியே. | எ - ன், நிரனிறைப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமாகிய இவற்றையும் இவற்றிற்குப் பொருளாய் வருவனவற்றையும் வெவ்வேறே அடைவே தொகையொப்பவைத்து வைத்தமுறையேயாதல் எதிரேறேயாதல் பொரு ளேற்குமாறு சொல்லைக்கூட்டிப் பொருள்கோடல் 2நிரனிறைப்பொருள் கோளாம் எ - று.
எனவே, பெயர்ச்சொல்லும் பொருளும் வேறுநிறீஇயது பெயர் நிரனிறை; வினைச்சொல்லும் பொருளும் வேறுநிறீஇயது வினைநிரனிறை; நிறீஇய முறையே பொருள்கொள்வன: முறைப்பெயர் நிரனிறை, முறை வினைநிரனிறை யென்பனவாம்: எதிர்தொடங்கிப் பொருள்கொள்வன: எதிர்ப்பெயர்நிரனிறை, எதிர்வினைநிரனிறை யென்பனவாம். இவ்வாற்றான் நிரனிறை நான்காம்.
வ - று. “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி, மதிபவள முத்த முகம்வாய் முறுவல், பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல், வடிவினளே வஞ்சி மகள்” (யா. வி.) “காமவிதி கண்முக மென்மருங்குல் செய்யவாய், தோமி றுகடினி சொல்லமிழ்தந் - தேமலர்க், காந்தள் குரும்பை கனக மடவாள்கை, யேந்திளங் கொங்கை யெழில்” (யா. வி.), “முறிமேனி 3முல்லை முறுவல் வெறிநாற்றம், வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” (குறள். 1113) எனவருமிவை முறைப்பெயர்நிரனிறை.
“காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப, போதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியான், மண்ணமிர்த மங்கையர்தோண் மாற்றாரை யேற்றார்க்கு, நுண்ணிய வாய பொருள்” (யா. வி) இது முறை வினைநிரனிறை.
“குன்ற வெண்மண லேறி நின்றியா, மின்னுங் காண்கும் வம்மோ தோழி, களிறுங் கந்தும் போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும், தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே” (தொல். அகத். சூ. 11. ந; யா. வி.) “ஆடவர்க் ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும், பாடகமு மூரகமும் பஞ்சரமா - நீடியமால், நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ, மன்றார் கலிக்கச்சி மாண்பு” (கணிகண்ணர் பாட்டு; குருபரம்பரை), “கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற், சான்றோர், குழாஅத்துப் பேதை புகல்” (குறள். 840), “விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல், கற்றாரோ டேனை யவர்” (குறள். 410) எனவருமிவை எதிர்ப்பெயர்நிரனிறை. | |
|
|