226 | நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும் | | | எதிர்வினைநிரனிறை வந்தவழிக்காண்க.
இதனுள், ‘நெறி’ என்றமிகையான், ஒருசாரார் மயக்கநிரனிறை, ஒருமுதனிரனிறை, இருமுதனிரனிறை, உய்த்துணர்நிரனிறையெனவும் வேண்டுவரென்க.
அவற்றுள் “அம்ம் பவள்ள் வரிநெடுங்க ணாய்வஞ்சிக், கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கி, னரும்ம் பவண்முலை யொக்குமே யொக்கும், கரும்ம் பவள்வாயிற் சொல்” (யா. வி.), “கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு, பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ, மின்ன் னுழை மருங்குன் மேதகு சாயலா, ளென்ன் குறமகளா மாறு” (யா. வி.) “இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா, வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி, லரங்க மணிபொழிலா வாடுமாயின், மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்ச மென்செய்த திளவேனில்” (யா. வி.) இவை மயக்கநிரனிறை யென்று யாப்பருங்கல முடையார் காட்டினர். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
“மீனாடு தண்டேறு வேதிய ராதியா, வானாத வைந்தொன்பா னாயினவும் - தேனார், விரைக்கமல வாண்முகத்தாய் வெள்ளை முதலா, உரைத்தனவு மிவ்வாறே யொட்டு” (யா. வி.) இது முதல் நிறுத்த முறையானே பின்னும் முற்று நிறுவாது ஒருதிறம் முதலாகவென்று சொன்னமையான் ஒருமுத னிரனிறை. “வெண்பா முதலாக வேதிய ராதியா, மண்பால் வகுத்த வருணமா - மொண்பா, வினங்கட்கு மவ்வாறே யென்றுரைப்பர் தொன்னூன், மனந்திட்பக் கற்றோர் மகிழ்ந்து” (யா. வி.) இஃது இருதிறம் முதலாவென்று சொன்னமையான் இருமுதனிரனிறை. “ஆரன் மகமே யனுட மவிட்டமென், றீரிரண்டு மாதியா வெண்ணியநாள் - சீரிய, வெண்பா வகவல் 4கலிவஞ்சி யென்றுரைத்தா, ரெண்பா லறிவோ ரெடுத்து” (யா. வி.) இது முதற் சிலபொருளையோதி இன்னதற்கு இன்னதென்றானும் இன்னது முதலென்றானும் ஓதாது பா நான்கென்று பொதுப்பட வைத்தமையான் உய்த்துணர் நிரனிறை.
(பி - ம்.) 1, 2 நிரைநிறைநெறியே (முற்றுமிப்படியேகொள்க.)3 முத்தமுறுவல் 4 கலிப்பாவஞ் சிக்குரைத்தார் | (63) | | (414) | எழுவா யிறுதி நிலைமொழி தம்முட் பொருணோக் குடையது பூட்டுவில் லாகும். | எ - ன், பூட்டுவிற்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பாவின்முதலினும் ஈற்றினுநின்ற மொழிகள் தம்மிற் பொருள்நோக்கிநிற்பது பூட்டுவிற் பொருள்கோளாம் எ - று.
வ - று. “திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத, ரிறந்து படிற் பெரிதா மேதம் - உறந்தையர்கோன், றண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக், கண்ணாரக் காணக் கதவு” (முத். புறத். காம.) எனவரும் | (64) | |
|
|