| (415) | இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும் நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை. | எ - ன், தாப்பிசைப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) பாவின் இடைநின்றமொழி முதலினும் ஈற்றினும் சென்று பொருள்கொள்வது தாப்பிசைப்பொருள்கோளாம் எ - று.
வ - று. “உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண, வண்ணாத்தல் செய்யா தளறு” (குறள். 255.) இதனுள், ஊனென இடைநின்றமொழி ஏனை ஈரிடத்தும் சென்றவாறு காண்க. | (65) | | (416) | செய்யு ளிறுதி மொழியிடை முதலினும் எய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே. | எ - ன், அளைமறிபாப்புப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செய்யுளீற்றுநின்றமொழி இடையிலும் முதலிலும் சென்று பொருள்கொள்வது அளைமறிபாப்புப் பொருள்கோளாம்.
வ - று. “தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமும், சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமு, 1மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும், வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே” (யா. வி.) எனவரும். (மூழ்ந்த - வளைந்த.)
(பி - ம்.) 1 மூழ்ந்து | | (417) | யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே. | எ - ன், கொண்டுகூட்டுப் பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) செய்யுளது பலஅடிகளுள்ளும் நின்றமொழிகளைப் பொருளேற்குமிடத்தே ஏற்ப வருவித்துப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாவது எ - று.
வ - று. “ஆலத்து மேல குவளை குளத்துள, வாலி னெடிய குரங்கு” (யா. வி.) இஃது, ஆலத்துமேல குரங்கு, குளத்துள குவளையென ஈரடியுட் பெயரையும் வினையையும் வேண்டுழிக் கூட்டிக்கொண்டமையான் ஈரடிக் கொண்டுகூட்டு; இதனை மொழிமாற்றென்பாரும், ஈரடிமொழிமாற்றென்பாருமுளர். அவ்வாறுகொள்ளின், ஏனைப்பல வடிகளுள்வரினும் பலபெயர் கொடுக்கவேண்டுமென்க. “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல், வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி, அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே, வங்கத்துச் சென்றார் வரின்” (யா. வி.) இஃது, அஞ்சனத்தன்ன பைங்கூந்தல் எ - ம், தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண் கோழி முட்டையுடைத்தன்னபசலை எ - ம் பலவடியிற் சொற்களையுங் கூட்டிக் கொண்டமையால், பலவடிக்கொண்டுகூட்டு. | (67) | |
|
|