228

நன்னூல் மூலமும், மயிலைநாதருரையும்

   
 

(418)

ஏற்புழி யெடுத்துடன் கூட்டுறு மடியவும்
யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை
மாட்சியு மாறா வடியவு மடிமறி.

     எ - ன், அடிமறிமாற்றுப்பொருள்கோளாமாறு உணர்த்துதல் நுத லிற்று.

     (இ - ள்.) பொருளுக்கு ஏற்புடையவிடத்திலே எடுத்துக்கொண்டு வந்து
கூட்டியுரைத்தற்குப் பொருந்தும் அடியவும், வேண்டினவடியைப் பாவிற்கு முதல் இடை
ஈறாகத் தொடுத்துரைத்தாலும் தம் ஓசையும் பொருளும் தப்பா அழகையுடைய அடியவும்
அடிமறிமாற்றுப்பொருள்கோளாவது எ - று.

     வ - று. “நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார், கொடுத்துத் தான்
றுய்ப்பினு மீண்டுங்கா லீண்டு, மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம், விடுக்கும்
வினையுலந்தக் கால்” (நாலடி. 93), “1அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம், விரிகடல்
சூழ்ந்த வியன்கண்மாஞாலத், துரியதனிற் கண்டுணர்ந்தா ரோக்கமே போலப், பெரியத
னாவி பெரிது4” (பழ. 1) என வரும். அடியாகவெடுத்துக்கூட்டிப் பொருள்கோடலின்,
இவை கொண்டு கூட்டுப்பொருள்கோளில் அடங்காவென்க.

      “மாறாக் காதலர் மலைமறந் தனரே, யாறாக் கட்பனி வரலா னாவே, யேறா
மென்றோள் வளைநெகி ழும்மே, கூறாய் தோழி யான்வாழு மாறே” (யா. வி.) இதனுள்,
வேண்டியதோரடியை முதல் இடை ஈறாக உச்சரித்து அடிமறியாதல் காண்க. இஃது
ஏனைப்பாக்களினும் வருமாதலால், அடிமறி மண்டிலவாசிரியத்துள் அடங்காதென்க.

     அஃதேல், பாட்டிற்குரிய பொருள்கோள்களை ஈண்டுச் சொல்லவேண்டிய
தென்னையோவெனின், அஃதே! நன்றுசொன்னாய், மேல், ஒருமொழி, தொடர்மொழி,
பொதுமொழியென்று சொற்கூறு செய்து அவையாமாறு சொன்னாரன்றே; அவற்றுள்,
தொடர்மொழி அடிமறிமாற்றொழித்த ஏனை ஏழுபொருள்கோளும்படத்
தொடர்வனவுளவாகலின், ஈண்டுவைத்தாரென்க. அஃதேற் பெரும்பாலும் யாப்பிற்கே
உரிமையுடைமையின் ஆண்டேவைக்கற்பாலவெனின், முன்னம் சொல்லறிந்து
யாப்பறியவேண்டுதலிற் சொல் அறிவுழிவைக்க வேண்டுமென்க.

     அவைவருமாறு : பாவஞ்செய்தான் நரகம்புகும், புண்ணியஞ்செய் தான் சுவர்க்கம்
புகும், தவஞ்செய்தான் வீடெய்தும்;- இவை யாற்றுநீர்ப் பொருள்கோள் படத் தொடர்ந்த
தொடர்மொழி. அவர் தந்த சோறும் கூறையும் உண்டு உடுத்திருந்தோம்; இவளும்
இவனும் உமையும் உருத்திரனும்;- இவை நிரனிறைப்பொருள்கோள் படத்தொடர்ந்த
தொடர்மொழி. தந்தையைக்கண்டு தலையின் வணங்கினான்;- இது பூட்டுவிற்
பொருள்கோள் படத்தொடர்ந்த