தொடர்மொழி. நன்மக்களுள்ளும் வீடு பேற்றுல கத்துள்ளுஞ் சென்று இன்பமெய்துவர் அறத்தாற் பாவத்தாற் றீய மானிடருள்ளும் விலங்கினுள்ளும் நரகத்துள்ளும் சென்று துன்பமெய்துவர்;- இது தாப்பிசைப்பொருள்கோள்படத் தொடர்ந்த தொடர்மொழி. செல்வமும் சிறப்பும் 2கல்வியும் மீக்கூற்றமும் வலியும் வனப்பும் ஆற்றலும் புண்ணியத்தா னாம்;- இஃது அளைமறிபாப்புப் பொருள்கோள் படத் தொடர்ந்த தொடர்மொழி.
மொழிமாற்றுப் பொருள்கோளும் கொண்டுகூட்டுப்பொருள்கோளும் படத் தொடர்ந்த தொடர்மொழி வந்த வழிக்கண்டுகொள்க. பிறவுமன்ன.
(பி - ம்.) 1 அரிறவிர்த்து 2 கல்வியுந் தேற்றமும் | (68) | மூன்றாவது பொதுவியல் முற்றிற்று. | நான்காவது | இடைச்சொல்லியல் | | (419) | வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் 1றனித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத் | | 5 | தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல் | என்பது சூத்திரம்.
இவ்வோத்து என்னுதலிற்றோவெனின், ஓத்துநுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும்; ஆயின், இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், இடைச்சொற்களது இயல்பு உணர்த்திற்றாதலான், இடைச்சொல் லியலென்னும் பெயர்த்து, மேலோத்தினோடு இதற்கு இயைபு என்னையோ வெனின், ஆதியில் நால்வகைச்சொற்களும் உணர்த்துவானெடுத்துக்கொண்டார், அவற்றுள், இரண்டு உணர்த்தி அவற்றின் பின் நான்கிற்கும் பொதுவான அதனைச் சிங்கநோக்காக மேல் வருவனவற்றையும் தழுவ வைத்தார்; அதனால், மேலதனோடு இயைபுடைத்தென்க.
இவ்வோத்தினுள், இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இடைச்சொல்லினது இயல்பும் அதனது பாகுபாடும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ - ள்.) வேற்றுமையுருபு வினையுருபு சாரியையுருபு உவமவுருபு இவைகளாகியும் தத்தம்பொருள்காட்டுவனவும் இசைநிறைப்பனவும் 2அசை நிலையனவும் குறிப்பின்வருவனவுமென்னும் எட்டுப் பகுதியவாய்த் தாமாகத் தனித்து நடத்தலின்றிப் பெயர்வினைகளாம் இரண்டின் பின்னானும் முன்னானும் ஓரிடத்து ஒன்றானும் பலவானும் வந்துநிற்பது இடைச்சொல்லாவது எ - று. | |
|
|