1. - எழுத்தியல்

23

   

சுட்டெழுத்துக்கள்

 

(65)

அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே.

      எ - ன், அவ்வுயிர்க்கே இன்னும் ஒருவகையாற் பெயரிடுதல் நுதலிற்று.

      (இ - ள்.) அ இ உ என்னும் இம்மூன்றும் மொழிமுதற்கண்ணே தனித்துநிற்பிற்
சுட்டென்னும் குறியவாம் எ -று.

      1 வரலாறு: அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றனெனக் கண்டு கொள்க.

      (பி - ம்.) 1 உதாரணம் (பின்னும் இப்படியே.)
 

வினாவெழுத்துக்கள்

 

(66)

எயா முதலும் ஆஓ வீற்றும்
ஏயிரு வழியும் வினாவா கும்மே.

     1 இதுவுமது.

     (இ - ள்.) எகரமும் யாவும் மொழிமுதற்கண்ணே நின்று
2 வினாவாம்; ஆகாரமும் ஓகாரமும் ஈற்றின்கண்ணேநின்று
3 வினாவாம்; ஏகாரம் இவ்விரண்டிடத்தும்நின்று 4 வினாவாம். எ - று.

     உயிர்வினாவுடனே யாவினாவுரைத்தமை மயங்கக்கூறலென்னுங் குற்றமாம்
பிறவெனின், இது தொகைவகைவிரிபடச் செய்கின்ற நூலாதலானும் முதல்வினாவென்னும்
பொருளொப்புமையானும் குற்றமாகாதெனக்கொள்க.

     வ - று. எவன், எவள், எவர், எது, எவை; யாவன், யாவள், யாவர், யாது, யாவை
என எ யா முதற்கண் வினாவாய் வந்தன. *உண்கா, (உண்கோ? கொற்றா! (சாத்தா,
தேவா, பூதா) என ஆகாரமும் ஓகாரமும் ஈற்றின்கண் வினாவாய்வந்தன. ஏவன், ஏவள்,
ஏவர், ஏது, ஏவை; (உண்கே? கொற்றா! என ஏகாரம் முதலினும் ஈற்றினும் நின்று
வினாவாயிற்று.(

     (பி - ம்.) 1 எ - ன், இதுவுமது 2 முதல்வினாவென்னும் பெயரவாம் 3
ஈற்றுவினாவென்னும் பெயரவாம் 4 இருவழிவினாவென்னும் பெயர்த்தாம்
 

(12)

வல்லினம்

 

(67)

வல்லினங் கசட தபறவென வாறே.

     எ - ன், மேல் மெய்யென்று குறிப்பிடப்பட்டவற்றுள், ஒரு சாரனவற்றிற்கு
இன்னும் ஒருவகையாற் பெயரிடுதல்நுதலிற்று.

     (இ - ள்.) கசடதபற வென்னும் ஆறெழுத்தும் வல்லினமென்னும் குறியவாம் எ-று.
 

     * உண்பேனா? ( உண்பேனோ? ( உண்பேனா? ( இதன்பின், “ஐ ஒள இ
உச்செறிய” என்னும் சூத்திரம் சில பிரதிகளில் வரையப் பெற்றுள்ளது.