4. - இடைச்சொல்லியல்

231

   
1ஞெரேரென்பது 2 “ஞெரேரெனத், தலைக்கோள் வேட்டங் களிறட்டா அங்கு”
(பொருந. 141 - 2) என வெருவுதற்பொருளில் வரும்.

     அந்தோ அன்னோ கொல்லோ ஆ ஆவா அஆ என்பன இரக்கங்குறித்துவரும்;
“அந்தோ விசயை பட்டன” (சீவக. 312), “அரக்காம்ப னாறும்வா யம்மருங்குற் கன்னோ,
பரற்கான மாற்றின கொல்லோ”, (நாலடி. 396), “ஆசா கெந்தை யாண்டுளன்
கொல்லோ” (புறநா. 235 ; குறுந். 176, 325), “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோடு”
(யா. வி.), “ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தார்” (யா. வி.), “அஆ, விழந்தானென்
றெண்ணப் படும்” (நாலடி. 9) எனக் காண்க.

     ‘இனி’ என்றது காலத்தின் மேலும் இடத்தின்மேலும் ‘முன்’ என்பது படவரும்;
“அளிதோ தானே நாணே நம்மொடு, நனிநீ டுழந்தன்று மன்னே யினியே” (குறுந். 149),
“இனியெம் மெல்லை” என வரும்.

     ‘என்’ என்பது சொல்லுதலென்னும் தொழில்குறித்துப் பெயர்வினை கட்குரிய
விகுதிகளுடனேவரும்; “எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்,
கண்ணென்ப வாழு முயிர்க்கு” (குறள். 392), “மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக்
கண்ணே, கடியென்றார் கற்றறிந் தார்” (நாலடி. 56), “செல்வா ரல்லரென் றியானிகழ்ந்
தனனே, விடுவா ளல்ல ளென் றவரிகழந் தனரே” (குறுந். 43) எனக் காண்க.

     ‘ஏன்’ என்பது, ஒழிதற்பொருள்குறித்துவரும்; ஏனோன், ஏனோள், ஏனோர், ஏனது,
ஏனவை, ஏனைய, ஏனுழி எனக் காண்க.

     ‘ஏதில்’ என்பது, அயலென்னும் பொருள் குறித்துவரும்; ஏதிலான், ஏதிலாள்,
ஏதிலார், ஏதிலது, எதில, “ஏதிலான் செய்த திறப்பவே” (நாலடி. 228), “ஏதி லாட்டி
யிவளெனப், போயின்று கொல்லோ” (நற். 56), “ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங்
காண்கிற்பின்” (குறள். 190) எனக்காண்க.

     ‘ந’ என்பது சிறப்புப்பொருட்டு; பெயர்முன் அடுத்துவரும்; நக்கீரர்,
நச்செள்ளையார், நப்பாலத்தனார், 3நப்பிஞ்ஞை, நந்நாகனார், நக்கடகமெனக் காண்க.

     ‘கல்’ என்பது முதல் நான்கும் ஓசைப்பொருண்மேல் வரும்; “கல் லெனக்
கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்” (கலி. 5), “ஒல்லென் றொலிக்கு மொலிபுன
லூரற்கு” (ஐந். ஐம். 28), “புள்ளுங் 4கொல்லென வொலிசெய்யும்”, “நெடுநீர்க்
குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து” (புறநா. 243) எனக் காண்க.

     ‘துண்’ என்றதுமுதல் நான்கும் குறிப்புப்பொருண்மேல் வரும்; “துண்ணென்னு
நெஞ்சமொடு”, “போர்த்ததன் னகலமெல்லாம் பொள் ளென வியர்த்துப் பொங்கி”
(சீவக. 256), “பொள்ளென வாங்கே புறம் வேரார்” (குறள். 487), “கம்மென, வம்பு
விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்று” (அகநா. 11), “கொட்புறு நெஞ்சிற் கொம்மென
வுராஅய்” எனக் காண்க. பிறவுமன்ன.